பக்கம்:கல்வி உளவியல்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கல்வி உளவியல் வெளிகள் ஏற்படத்தான் செய்கின்றன. இம்முறையில் வகுக்கப்பெறும் திட்டத்தில் இன்றியமையாத சில பாடப்பகுதிகளும் தேவையான அனுபவங்களும் விடப்பெறுகின்றன. சில சமயம் பயனற்ற, உற்பத்தி பற்ற தொழிலில் நேரத்தைச் செலவிடவும் நேர்கின்றது. பயிற்சிக் குறைவும் ஏற்படுகின்றது. இதல்ை பெறும் அறிவு பயனுடையதா யினும், தொடற்பற்று நிற்கிறது. மாளுக்கர்கள் பல துறைகளைப்பற்றிய முழுக் காட்சிகளை அடைய முடிகிறதில்லை. இறுதியில் கூறிய குறை எல்லா முறைகளுக்கும் பொதுவானதே. கற்றல் பற்றிய புதிய கருத்து : கற்றல் துலங்கல்களினலேயே நடைபெறுகின்றது என்பது செயல்முறை நிபுணர்கள் கூறும் உண்மை. இக்கருத்துப்படி ஆசிரியர் கற்பிக்கலாமேயன்றி, குழந்தையின் கல்வி தன் சொந்தச் செயலாலேயே நடைபெறுகின்றது. எனவே, அறிவைத் திரட்டிப் பெருக்குவதால் பயன் இல்லை ; அதனை நடைமுறையில் கையாளுவதே பயன் தருவது. அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்." என்ற குறட்படி வெறும் அறிவு ஆற்றல் அன்று; அதன் நடைமுறைப் பயனே ஆற்றலாகும். எனவே, புதுமுறைப் பள்ளிகளில் சமுதாய வாழ்க்கையனுபவங்களின் அடிப்படையில் பாடத்திட்டம் வகுக்கப்பெறுகின்றது. ஆதலால் அப் பள்ளிகள் வாழ்க்கை கிலைகளைக் கொண்ட உயிருள்ளதோர் சமூகங் களாகக் கருதப்பெறுகின்றன. புள்ளியில் கூட்டுறவு விற்பனைச்சங்கம், மருந்துச்சாலை, பள்ளிச்செய்தி இதழ், கூட்டுறவு அடிப்படையிலமைந்த பள்ளிவேலை முதலியவற்றைக் காண்கின்ருேம். மாளுக்கரின் தன்னுட்சி முறைக்கு ஆசிரியர் ஊக்கம் தருகின்றனர். சமூக அனுபவம் பெறுவதற்காக தொழிற்சாலைகள், முன்னேற்ற இயக்கங்கள், சந்தைகள் போன்றவற்றைப் பார்ப்பதற்காக மாளுக்கர்கள் வெளியில் அழைத்துச் செல்லப்பெறுகின்றனர். வேலை மூலம் கல்வி நம் நாட்டின் பண்டைய கல்வி முறையில் வேலைக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. குருகுலக் கல்வி முறையில் மாளுக்கன் ஆசிரியர் அடியில் அமர்ந்து அவர் இட்ட உழைப்புப் பணிகளைச் செய்து க்க்குறள் . 430,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/234&oldid=778004" இலிருந்து மீள்விக்கப்பட்டது