பக்கம்:கல்வி உளவியல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

----- கற்றல் 213 அத்தகைய அனுபவத்தின் மூலம் கற்ருன். முதலாவதாக, மாளுக்கர்கள் தங்களுக்கு வேண்டிய வேலைகளைத் தாமாகவே செய்து கொண்டனர். உடல் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை, நீர் எடுத்தல், உணவுப்பொருள் வாங்குதல், பண்டம் சேகரித்தல், அட்டில் தொழில் ஆகியவை இவற்றுள் அடங்கும். இரண்டாவதாக, அவர்கள் ஆசிரியருக்கு வேண்டிய வேலைகளையும் செய்தனர். இந்த இருவகை வேலைகளிலும் உடல் உழைப்பு இருந்தது. பிற்காலத்தில் செயற்கைச் சாதிமுறை ஏற்பட்டு வலுத்தது. உடலுழைப்பு ஒரு சிலரைச் சார்ந்தது. மனத்தின் அடிப்படையில் அமைந்த கலை, அறிவியல் போன்றவை வேறு சிலரைச் சார்ந்தன. ஆகவே, கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சிலரைக் கற்பிப்பதற்கும் ஓய்விற்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பயிற்றுவிப்பதாகும் என்று எண்ணும் நிலை ஏற்பட்டது. இக்கல்வியில் பெரும்பான்மையோரின் வாழ்க்கைத் தேவைகள் முற்றிலும் கவனிக்கப்பெறவில்லை ; புறக் கணிக்கவே பெற்றன. கடந்த சுமார் இருநூறு யாண்டுகளாக இந்தியாவின் உயர்நிலைக் கல்வி முறை வெள்ளையர் ஆட்சித் தேவையை யொட்டி அமைந்தது. கலப்பையால் உழுவதைவிட காகிதத்தில் எழுதுவது உயர்ந்தது என்ற மனப்பான்மையை நன்கு வளர்த்தது. உழைப்பு இழிவானது என்னும் தவருண எண்ணத்தை மீண்டும் இம் முறை வலியுறுத்தியது. நாளடை வில் காம் இங்கிலைமை கியாயமற்றது என்பதை உணரத் தொடங்கினுேம். இங்கிலேயில் காந்தியடிகள் வேல் மூலம் கல்வி பெறக்கூடிய ஒரு திட்டத்தை வகுத்துத் தந்தார். இத் திட்டம் நாட்டு மக்கள் அனைவருக்குமே பயன்படும் முறையாக அமைந்துள்ளது. இக் கல்விமுறை மத்தியப் பிரதேசத்திலுள்ள வார்தா என்ற ஊரில் காந்தி யடிகளால் முதன்முதலில் தொடங்கப் பெற்றதால் இது வார்தாக் கல்வி முறை ' என்று வழங்கப்பெற்றது. இது ஒரு செய்முறைக் கல்வித் திட்டம் ஆகும். இதில் காந்தியடிகளின் கைவண்ணத்தையும் கருத்து வண்ணத்தையும் காணலாம். இம்முறையின் முக்கிய கூறுகள் : பயன்படத்தக்க ஏதாவது ஒரு கைத் தொழிலை மையமாக வைத்துக் கொண்டு அதைச் சுற்றியே தேவையான பிற பாடங்களைக் கற்பித்தல் இம்முறையின் நோக்கமாகும். கைத்தொழிலை இங்கு ஒரு பொறி இயங்குவதுபோல் கற்பிப்பதில்லை : கைத்தொழில் மூலமாக வரலாறு, கிலநூல், கணக்கு, அறிவியல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/235&oldid=778006" இலிருந்து மீள்விக்கப்பட்டது