பக்கம்:கல்வி உளவியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 3 உளவியலும் ஓர் அறிவியலே முதலில் அறிவியல்" இன்னது என்பதை வரையறை செய்து கொள்வோம். அறிவியல் என்பது ஒர் ஒழுங்கான முறையில், ஒருங் கமைந்த- நன்கு சோதிக்கப்பெற்ற-செய்திகளின் தொகுப்பு. அது ஒரு குறிப்பிட்ட துறையையோ அல்லது ஒரு சிலவகைத் தகவல்களையோ நிகழ்ச்சிகளையோ பற்றி விரித்து உரைக்கும். எடுத்துக்காட்டாகபெளதிகம் ஆற்றலைப்பற்றி, அஃதாவது வெப்பம், ஒளி, ஒலி, மின்சாரம் போன்றவற்றின் சில மெய்ம்மைகளைப்பற்றி, எடுத்துரைக் கின்றது; வேதியல் சடப்பொருளைப்பற்றி, அஃதாவது சடப்பொருள். கள் எவ்வாறு ஒருங்கிணைந்தன, அவை எவ்வாறு பிரிகின்றன என்பதைப்பற்றிப் பேசுகின்றது; உயிரியல் உயிருள்ள பொருள்களைப் பற்றிக் கூறுகின்றது; அஃதாவது தாவரங்கள், பிராணிகள் எவ்வாறு வளர்ந்து துலக்கமுறுகின்றன என்பதைக் கூறுகின்றது; உளவியல்க9 என்பது உயிரிகளின் மனச் செயல்களை வரையறுத்துக் கூறுவது ; அஃதாவது நடத்தையை எடுத்துரைப்பது. இன்னும் விளக்கமாகக் கூறினுல் மக்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றை விளங்க உரைப்பது உளவியலாகும். ஆகலின், ஒவ்வோர் அறி வியல் துறையும் ஒன்ருேடொன்று தொடர்பு கொண்ட மெய்ம்மைகளின் தொகுதியை விளக்குகின்றது. ஒவ்வொரு துறையைச் சார்ந்த பொருள் அல்லது மெய்ம்மைகளின் தொகுப்பு ஒரு கட்டுப்பாட்டினுள் அடங்கிய உற்றுநோக்கலால் சிறப் பான முறையில் பயிற்சி பெற்றவர்களால் திரட்டப்பெற்றது ; அவர்கள். தாம் அறிவியல் அறிஞர்கள். எனவே, இப்பொருள் கற்பனையாலும் சிந்தனையாலும்மட்டிலும் திரட்டப்பெற்றது அன்று என்பதாகின்றது. ஒவ்வொரு துறையிலுமுள்ள செய்திகள் வரையறுக்கப்பெற்ற செய்முறை களிஞல்: திரட்டப்பெறுகின்றன. இச் செய்முறைகளைத் தொகுத்து 'அறிவியல்முறை” என்று வழங்குவர். அறிவியல்முறையில் பல படி. கள் உள்ளன. கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கலால் தகவல்கனத் திரட்டி அவைகளை ஒரு பிரச்சினேபோல் கூறுதல் முதற்படியாகும். இவற்றைக் கொண்டு கருதுகோள்கள்' அமைத்துக்கொள்வது இரது டாவதுபடியாகும். இக் கருதுகோள்கள் சரியானவைதாமா என்பதை o sistestuiso -science. 7 Gtier#si - physics. o Gaišius - chemistry. g = isofluić) – biology. 10 a-Šroudè - pSychology. * செய்முறை . procedure. 12 solouš (pop - Scientific method. * * *@gćsm or - hypothesis.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/24&oldid=778016" இலிருந்து மீள்விக்கப்பட்டது