பக்கம்:கல்வி உளவியல்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் உளவியலார் அனைவரும் ஒரே மனத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடிய கற்றல்பற்றிய கொள்கை இன்னும் உருப்பெறவில்லை. கற்றல்பற்றிய பிரச்சினையைப் பல்வேறு திசைகளிலிருந்தும் பல்வேறு சோதனைகளின் துணைகொண்டும் அணுகி அவர்கள் பல்வேறு கூறுகளை வற்புறுத்துகின் றனர். இங்கு அங்ங்னம் அவர்களால் முக்கியமானவை என்று ஒப்புக் கொள்ளப்பெற்ற சில கூறுகளைப்பற்றி ஆராய்வோம். அக்கறை கற்றலுக்கு இன்றியமையாத கூறு அக்கறை'யாகும். அக்கதை இருந்தால் கற்றல் நன்கு நடைபெறும். அக்கறையைக் கற்றலின் ஈர்ப்பு விசை” எனக் கூறுவர். ஒருவர் கணிதத்திலாவது, படங்களைத் திரட்டு வதிலாவது, தோட்ட வேலையிலாவது விருப்பம் உடையவராக இருந்தால் அவருக்கு அச்செயலில் அக்கறை உள்ளது என்று நாம் கருதுகின்ருேம். ஒருவருக்குப் பல செயல்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பிருப்பினும், அவர் அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஏனையவற்றைக் கைவிடுதல் அவருக்கு அச்செயலில் உள்ள அக்கறையைக் காட்டுகின்றது. நமது இயல்பூக்கங்களே' நமக்குப் பிறவியில் ஏற்பட்ட அக்கறை களாகும். சிறு குழவிகளின் செயல்களை உற்று நோக்கில்ை இவ் வுண்மை தெளிவாகப் புலணுகும். ஒரு குழந்தை ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றும்பொழுது ஒரு சிறிய திறனின் அவசியத் தையோ, புதிய அறிவின் தேவையையோ அறிகின்றது. பிறகு இரு மடங்கு முயற்சியுடன் செயலாற்றத் தொடங்குகின்றது. அது புதிதாகக் கற்கவேண்டிய திறனுக இருப்பின் குழந்தை மனஉறுதியுடன் கைகொள் ளும் தன் பயிற்சியால் மூத்தோர்களையும் வியப்படையும்படிச் செய்கின்றது;

  • &-go - factor. 3.915&op - interest. *Fáiju colos - force of gravitation. *ĝuuêðu,š&ù) - instinct.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/242&oldid=778020" இலிருந்து மீள்விக்கப்பட்டது