பக்கம்:கல்வி உளவியல்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 22; அஃது அதற்குத் தேவையான அறிவாக இருப்பின், அது மூத்தோர்களைப் பிடிவாதத்துடன் பல விளுக்களைக் கொண்டு துளைத்து அவர்களின் பொறுமையையே சோதித்து விடுகின்றது. குழந்தை தாளுகத் தேர்ந் தெடுக்கும் திட்டமாக இருந்தால் அதனை கிறைவேற்றுவதில் அது மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றது ; செய்த வேலையையே திரும்பத்திரும்பச் செய்வதில் மகிழ்ச்சியையும் காட்டுகின்றது. இந்த அழுத்தமான அக் கறையே குழந்தை முதல் மூன்ருண்டுகளில் விரைவான முன்னேற்றம் அடைவதற்குக் காரணம் ஆகும். எனவே (1) தொடக்க ஆண்டு களில் கற்றல் அழுத்தமான அக்கறையின் அடிப்படையில் அமை கின்றது. குழந்தைகளிடம் இயல்பாக இருவகையான மாறுபட்ட உளப்போக் குகள் காணப்பெறுகின்றன. ஒருவகை புதியனவற்றைக் காணல் : மற்ருெருவகை அறிந்தவற்றை ஒன்று திரட்டுதல். இவற்றை முறையே படைக்கும் உளப்போக்கு நடை முறை உளப்போக்கு? என்று அறிஞர் கள் குறிப்பிடுவர். இளமையில் குழவிகள் வியத்தகு முறையில் கற்பதற்கு இந்த உளப்போக்குகளே முக்கிய காரணமாகும். ஒரு குழந்தை ஒருசிறு பொட்டலத்தைப் பார்க்கின்றது ; அதன் விடுப்பூக்கம் கிளர்ந்தெழுகின் றது; அதன் அக்கறையால் உந்தப்பெற்று ஆராய்ச்சியில் இறங்குகின்றது: பல இடர்ப்பாடுகள் நேரிடுகின்றன ; உடனே போருக்கம் கிளர்ந்தெழுகின் றது; இருமடங்கு அக்கறை உண்டாகிறது; இந்த அவசரமான ஆராய்ச்சி யில் அதற்கு அதிக புத்தறிவு ஏற்படுகின்றது ; கைத்திறனில் மேம்பாடு பெறுகின்றது; சமூகப் பொருத்தப்பாட்டின் அவசியத்தையும் கற்கின்றது. அடுத்தமுறை ஒரு குப்பைவண்டி ஒட்டுபவனக் காண்கின்றது : அவனைப்போல் தானும் செய்ய விழைகின்றது : முதன்மையூக்கம்" கிளர்க் தெழுகின்றது ; குழந்தை குப்பையோட்டிபோல் வாழவிழைகின்றது; இஃது இயலாததொன்று. இங்கில விளையாட்டுத் துடிப்பால் காக்கப்பெறு கின்றது. பாவனை உலகில் தானும் அவனைப்போலாகின்றது; எல்லா இடர்ப்பாடுகளும் இதல்ை தாமாகவே நீங்குகின்றன. குழந்தையிடம் இவ்விளையாட்டு வளருங்கால் ஒன்றன்பின் ஒன்ருகப் பல இயல்பூக்கங் கள் கிளர்ந்தெழுவதைக் காணலாம். வண்டிபுனைதலில் கட்டுக்கத்தில் அக்கறையும், குதிரைக்கு ஆணைகள் தருவதில் முதன்மையூக்கத்தில் தன் மேம்பாட்டை வலியுறுத்தும் அக்கறையும், எதனேக் கூடையாகப் ogurse - tendency. Guoliei ourse - creative tendency. "Eco-pop a grüouršć - routine tendency, sount Loosh - parcel. 90pgoriou, u,éâû - instinct of self-assertion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/243&oldid=778022" இலிருந்து மீள்விக்கப்பட்டது