பக்கம்:கல்வி உளவியல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கல்வி உளவியல் கட்குத் தமது பாடத்தின் மீது கவர்ச்சி இல்லை என்பது தெளிவு. தேர்வில் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணமும் அது பிற்கால வாழ்வில் பயன் படும் என்பதும் கவர்ச்சிகளாக இருப்பதால் மாளுக்கர்கள் கற்கின்றனர். இவை நேர் கவர்ச்சியைப்போல் அவ்வளவு அதிகமானவை அல்ல. இத் தகைய கவர்ச்சிகளே மாளுக்கர்களின் வாழ்க்கையை ஆட்சி கொள்ளு கின்றன. தற்காலப் பள்ளிகளில் கவர்ச்சிதரும் முறைகளில் பாடங்கள் பயிற்றப்பெறுகின்றன. உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகள் வகுப்பறையில் பயன்படுத்தப்பெறுகின்றன. தற்காலக் கல்வியின் கொள்கை செய்து கற்றல், அனுபவத்தினுல் கற்றல்' என்னும் வாய் பாடுகளில் அடங்கும். கற்கும் பொருள்கள் மாளுக்கர்களின் அனுபவத் துடன் பொருந்துவதால், மாளுக்கர்கள் பாடத்தை உற்சாகத்துடன் கற்கின்றனர். கல்வியில் கவர்ச்சி ஒருவழியாகவும் முடிவாகவும் அமைகின்றது; குழந்தையைப் பொறுத்தவரையில் கவர்ச்சி ஒருவழியாக அமைகின்றது. ஆசிரியரைப் பொறுத்தவரையில் அது ஒரு முடிவாக அமைகின்றது. நன்னடத்தை, கல்வி, விளையாட்டு, இலக்கியம் ஆகியவற்றில் குழந்தையின் கவர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தால், அஃது அவற்றில் எளிதாகத் திறனை அடைகின்றது. நல்லாசிரியர் குழந்தைகட்கு வெறும் அறிவைப் புகட்டாமல், அவ்வறிவை அவர்களே அடைவதற்குத் தூண்டு கின் ருர், கவர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்வதனை நோக்கமாகக் கொண்டே ஆசிரியர் தன் கற்பிக்கும் முறைகளை அமைத்துக் கொள்ளுகின்ருர். ஒரு பாடத்தில் அக்கறையைக் கிளர்ந்தெழச் செய்யயும் முறை: முதலாவதாக, ஆசிரியர் குழவிகளின் கவர்ச்சிகள் வயதிற்கேற்ப மாறு கின்றன என்றும், குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு நிலைகளிலும் கவர்ச் சிகளில் என்ன வேற்றுமைகள் தோன்றுகின்றன என்றும் உணர்தல் வேண்டும். குழந்தையை. நடுவாக வைத்தே கற்பித்தல் நடைபெறுதல் வேண்டும் ; பாடத்திற்குக் குழந்தையைப் பொருத்துதல் கூடாது. தலைக் கேற்றது குல்லாயேயன்றி, குல்லாய்க் கேற்றது தலை அன்று. ஆசிரியர் குழந்தைகளிடம் நன்முறையில் கலந்து பழகி, அவர்களுடைய திறன் களையும் மன வளர்ச்சியையும் நன்கு அறிந்து, அவற்றிற்கேற்றவாறு தம் பாடப்பொருள்களையும் கற்பிக்கும் முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும். குழவிகளின் விடுப்பூக்கத்தையும் நன்முறையில் வள்ர்த்து அவர்களின் அறிவுப்பசியை என்றும் தணியாது பாதுகாக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/246&oldid=778028" இலிருந்து மீள்விக்கப்பட்டது