பக்கம்:கல்வி உளவியல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கல்வி உளவியல் கொண்டிருப்பது. தொடர்ந்து நடைபெறும் தூண்டுதல் உறைப்பிலும் அளவிலும் குறைவாக இருப்பினும், அது கவனம் பெறும் சாதகமான ஒரு நேரம் ஏற்படலாம். அத் தூண்டல் திரும்பத் திரும்பத் தோன்றில்ை சாதகமான கிலே விரைவில் ஏற்படலாம் ; அஃதாவது தூண்டலின் காலத்தில் இடையீடு ஏற்பட்டால் கவனம் ஈர்க்கப்பெறும். கின்று கின்று தோன்றுவதும், அடுத்தடுத்து வருவதும் கவனம் பெறுகின்றது. வீட்டினுள்ளிருப்போர் கவனத்தைப் பெறக் கதவை விட்டுவிட்டு இடித்தால் அது அவர்கள் கவனத்தை இழுக்கின்றது. இங்குப் பல தூண்டல்களின் சேர்க்கை ஒரு தூண்டலின் உறைப்புக்குச் சமமாகின் றது. முதல் முறைகள் தவறிப் பின்னைய முறைகள் கவனிக்கப் பெறுவதால், இது தற்செயலாக கிகழ்ந்ததென்று கூற முடியாது. முதலில் கவனத்தின் ஓரத்தில் நடைபெற்ற செயல் பின் கவன மையத் தில் இடம் பெறுகின்றன. இக்கூறினைக் கொட்டகை முதலியவற்றை அணி செய்வோரும் இசைப்புலவர்களும் நன்கு பயன்படுத்துகின்றனர். பாடகர்கள் அடிக்கடி பண்ணை மாற்றிப் பாடுகின்றனர் : இராகமாலிகை நம் கவனத்தை ஈர்க் கின்றது. பேச்சாளர்கள் மோனையையும் சொல்லடுக்குகளையும் கையாளு கின்றனர். ஒரு பெரியார் ஒரு கூட்டத்தைத் தொடங்கும்பொழுதோ, விழாக்காலத்தில் தேர் வடம்பிடிக்கும்பொழுது சுவாமி புறப்பாட்டின் பொழுதோ, ஏதாவது ஒரு முக்கிய நாடகம் தொடங்கும்பொழுதோ விட்டுவிட்டு மூன்று அல்லது ஐந்து வெடிகள் போடப்பெறுகின்றன. (5) புதுமை : புதுமையும்’ ஒரு பெரிய கவனக்கூறு ஆகும். புலன் காட்சி முறைகள் யாவும் நாட்பட்டால் தம் வன்மையை இழக் கின்றன. புதிய காட்சியும், புது ஒளியும் மற்றவற்ருேடு மாறுபட்டுப் பிரிந்து தோன்றுவதால் கவனம் பெறுகின்றன. மற்றவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டுமாயின் அதற்குப் புதிய நிறம், புதிய வடிவம், ஒருகால் புதிய மணம், சுவை ஆகியவற்றை அளித்து அதற்கு முந்திய பொருளி னின்றும் அதனுடன் தோன்றுபவற்றினின்றும் வேறுபடச் செய்கின் ருேம். (6) மாற்றம் : ஒரு வகையில் ஒவ்வொரு தூண்டலும் ஒரு மாற்றமே ; அது உயிரியினிடம் ஏதாவது ஒரு கிலைமாற்றத்தை விளைவிக் கின்றது. ஆனல், மாருத நிலையிலுள்ள ஒரு தூண்டல் நாளடைவில் 2iபுதுமை - novelty. 2 su röpö • change.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/252&oldid=778042" இலிருந்து மீள்விக்கப்பட்டது