பக்கம்:கல்வி உளவியல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 231 புலன் தழுவலை ' விளைவிக்கின்றது; அது முற்றிலும் புலன் தழுவல் விளைவிக்கு முன்னரே கவனத்தை ஈர்க்கும் வலியிழக்கின்றது. நம் முடைய கவனம் வேறென்றுக்குப் பெயர்ந்து விடுகின்றது. ஆனல் தூண் டல்களில் மாற்றம் இருப்பின், அதில் நம் கவனம் ஈர்க்கப்பெறுகின்றது. இரைந்துகொண்டே செல்லும் நம் மோட்டாரின் ஒலியை நாம் பொருட் படுத்துவதில்லை ; அதில் ஏதாவது சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் நம் கவனம் அதில் திரும்புகின்றது. மேலே கூறிய புதுமையிலும் மாற்றம் மிகவும் முக்கியமானது. பல புதிய பொருள்களுக்கு நடுவில் மற்ருெருபுதிய பொருளே இட்டால் அது கவனம் பெறுவதில்லை. ஆனல், அதே நிலைமை யில் ஒரு பழைய பொருளை வைத்தால் அது கண்ணேப்பறித்துக் கவனம் பெறுகின்றது. இங்கு புதுப் பொருள்கள் பொதுவாகத் தோன்று கின்றமையின் ஒரு பழைய பொருள் அந் நிலையில் புதிதாகத் தோன்று கின்றது. பண்டைய மகளிர் முழங்கை வரையிலும் அணியும் சட்டையை இன்றைய மகளிர் அணிவதில் ஒரு புதுமை தோன்றுகிறது. நம்முடைய கவனமும் அந்நாகரிக முறையில் ஈர்க்கப்பெறுகின்றது. ஒரு தோட்டத்தில் அல்லது ஒரு மைதானத்தில் ஒரே இடத்தில் கின்று மேயும் மாட்டை நாம் கவனிப்பதில்லை. ஆனல், அது நடந்து செல்லும் பொழுதும் அல்லது ஒடும்பொழுதும் அதைக் கவனிக்கின்ருேம். விளம்பரம் செய்வோர் மின்னல் விளக்குகளைக் கையாளுவதன் காரணம் இதுவே. இனி, அகவயமானவற்றில் சிலவற்றை நோக்குவோம். அவை: (1) உடல்தேவைபற்றிய உந்துகள் : உடல் தேவையற்றிய மிக முக்கியமான உந்துகள் பசி, நீர்விடாய், பாலுந்தல், தாய்மை உந்தல் ஆகியவை. நாம் பசியுடன் தெருவழியே செல்லும்பொழுது, சாளரங் களில் காணப்பெறும் உணவும் ரொட்டிக்கடைகளிலுள்ள மணங்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. பசி மீதுர்ந்து கிற்றலால் ஏனைய இன்ப மணப் பொருள்களின் பரிமளத்தை மூளை கோக்காமல் மேற்குறிப்பிட்ட வற்றையே நாடுகின்றது. பாலில் கவர்ச்சியும் தாய்மை அன்பும் உட் சுரப்பிகளில் ஊறும் சாறுகளின் காரணமாகத் தூண்டப்பெறுகின்றன. தனியாள் பால்பற்றிய ஹார்மோன்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் பொழுது எதிர்பால் வேட்கை உடன் தூண்டுதலை விளைவிக்கும். குழந்தை பிறந்த ஒரு சில திங்கள் காலத்தில், தாய் தூங்கும் கிலேயில்கூட குழந்தையின் மிகச் சிறிய சிணுங்கலேயும் அவளுடைய காதும் மூளையும் கூர்மையாக அறிந்து கொள்ளுகின்றன. 24 L45) sur #gguó) - sensory adaptation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/253&oldid=778044" இலிருந்து மீள்விக்கப்பட்டது