பக்கம்:கல்வி உளவியல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கல்வி உளவியல் (2) பிறவிப் பண்புகளும் பயிற்றலும் : இவையும் கவனத்தை அறுதியிடுகின்றன. மனிதனுடைய கவர்ச்சிகள் பல கற்பதால் உண்டா கின்றன. அவை கல்வியையும் பயிற்றலையும் சார்ந்து கிற்கின்றன. சாதாரண மக்களுக்கு வைரங்கள் யாவும் ஒரே மாதிரியாகத் தோன்று கின்றன. ஆனல், ஒரு வைர வணிகர் அவற்றின் தராதரங்களை எளிதில் அறிகின் ருர். பெற்ருேர்களும் மூத்தோர்களும் முக்கியமானவை எவை என அடிக்கடி எடுத்துக்காட்டுவதால், குழந்தைகள் சரியாகக் கவனிக்க வேண்டியவை எவை என்பதை நன்கு கற்கின்றன். இங்ங்னமே பயிற்றலின் காரணமாகவும் நீண்ட அநுபவத்தின் காரணமாகவும் தாவர இயலறிஞர் பூக்களையும் பூண்டுகளையும் எளிதில் பாகுபாடு செய்து அறிகின்றர் ; கில உட்கூற்றியல்' அறிஞர் இயற்கையில் பாறைகள் உண்டாவதைக் கவனிக்கின் ருர்; உளவியலறிஞர் கூண்டினுள்ளும் வெளி யிலும் உள்ள பிராணிகளின் நடத்தையை அறிகின்ருர். பிறவிப்பண்பின் பயனுகச் சிலரது கவனம் நிலையற்று ஒரு பொருளிலிருந்து இன்ளுெரு பொருளுக்குச் சென்று கொண்டேயிருக்கும். சிலர் ஒவ்வொரு பொருளை யும் ஆழ்ந்து கவனிப்பர். (3) தற்கால எண்ணம் : நமது தற்கால எண்ணமும் கவனத் திற்கு வேண்டிய ஒரு கூறு ஆகும். ஒரு சமயம் நாம் மேற்கொண்ட வேலைபற்றியவைகளை யெல்லாம் உற்று நோக்குகின்ருேம். சினமுற் றிருக்கும்பொழுது தொந்தரவுகளையே கவனிக்கின்ருேம். நாம் புகை வண்டியில் பிரயாணம் செய்யும்பொழுதும் நம் காட்டுக் கால்நடைகளை கினைத்துக் கொண்டிருந்தால், இருபுறங்களிலும் காணும் ஆடுமாடுகளை நன்கு கவனிக்கின் ருேம். இக்கூறினை மருந்து விளம்பரம் செய்வோர் நன்கு பயன்படுத்துகின்றனர். அவர்கள் நோய்களின் அறிகுறிகளை வற்புறுத்துகின்றனர் ; படிப்போர் அவ்வறிகுறிகள் தங்களிடம் இருப்ப தாகப் பாவித்து மருந்துகளை வாங்குகின்றனர். (4) எதிர்பார்த்தல் மனப்பான்மை : எதிர்நோக்குதல் காம் கவனிக்கத் தேர்ந்தெடுக்கும் அனுபவத்தைத் திட்டம் செய்கின்றது. நாம் ஒருவரோடு பேச விரும்பினல் ஒரு மாபெருங் கூட்டத்தின் நடுவிலும் அவரைக் காண்போம். கடையில் நாம் வாங்க விரும்பும் பொருள் ஒன்றைப் பல பொருள் திரளின் நடுவிலும் பார்க்கின்ருேம். காட்டிற்குச் சென்ருல் பறவை அன்பன் குயிலின் இன்னேசையினைக் கேட்கின்ருன். மரவணிகன் மரங்கள் வெட்டுவதற்கு உதவுமா என்று ஆராய்கின்றன். கில் *-i-o-foué) - geology.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/254&oldid=778045" இலிருந்து மீள்விக்கப்பட்டது