பக்கம்:கல்வி உளவியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 5 உளவியலைப்பற்றி இன்னுெரு செய்தியும் ஈண்டுக் கவனிக்கத் தக்கது. பெளதிக இயல், வேதியல், விலங்கியல் போன்றவை இருப்பு கிலை நூல்களாகும். அறநூல்', அளவை நூல்: , எழிலியல் • போன்றவை உயர்நிலை நூல்களாகும்20. முன்னவை உள்ளவற்றை உள்ளபடியே உரைக்கும்; பின்னவை பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகள் எங்ங்னம் இருக்கின்றன என்று கூருமல், எங்ங்னம் இருக்கவேண்டும் என்று இயம்பும். எடுத்துக்காட்டாக, அளவைநூல் நாம் எங்ஙனம் சிந்திக்கின் ருே மென்று கூருமல், உண்மையை அணுக வேண்டுமாயின் எங்ங்னம் சிந்திக்க வேண்டும் என்று விளக்குகிறது. அறநூலும் காம் எங்ங்ணம் ஒழுகுகின்ருேம் என்று கூருமல் எங்ங்ணம் ஒழுக வேண்டும் என்று நவில்கின்றது. உளவியல் இருப்புகில நூல்வகையைச் சேர்ந்தது. ஆகவே, அஃது உளத்தின் சிந்தனைகள், செயல்கள் ஆகிய அனைத்தையும் உள்ளது உள்ளவாறே கூறுகின்றது. அவற்றைச் சரியென்ருே, தவ றென்ருே, நல்லதென்ருே, தீயதென்ருே முடிவுகட்டுவதில்லை. அது இயல் பான* செயல்கள், பிறழ்வான” செயல்கள், பித்தர் செயல்கள் முதலிய அனைத்தையுமே விளக்குகின்றது. அது மதிப்புப்பற்றிய விளுக்களில் தலையிடுவதில்லை. ஆகவே, அறநூாலும் அளவைநூலும் உளத்தின் செயல்களை அணுகும் முறைகளிலிருந்து அவற்றை உளவியல் அணுகும் முறையை வேறுபடுத்திக் காட்டுவது இன்றியமையாதது. உளவியலுக்கும் கல்விஉளவியலுக்கும் உள்ள தொடர்பு உளவியல் என்பது உயிரிகளின் நடத்தையையும், அவை எவ்வாறு பல்வேறு விதமாக மாறும் இயல்புள்ள தூண்டல்களுக்கேற்ற வாறு எதிர்வினைகள் புரிகின்றன என்பதையும் விரித்துரைக்கும் நூலாகும். அது மக்கள் நடத்தையையேயன்றி, பிராணிகளின் நடத்தையையும் எடுத்துக் கூறும், ஆகவே, உளவியல்வல்லார் எலிகள், பூனைகள், வாலில்லாக் குரங்குகள்' போன்றவை எவ்வாறு சிக்கறைகளில்’* ஒடு கின்றன என்பதுபற்றியும், அது போன்ற செயல்கள் புரிவதுபற்றியும் சோதனைகள் நடத்துவதில் அதிகக் காலத்தைச் செலவிடுகின்றனர்: i 5 esteoriláluus) – zoology. 1 & GGửų stånd FT & ssir – positive or deScriptive sciences. 17 gip GT & - ethics. *8 gjer so su gif sb - logie. 19 stgilsstusö - aesthetics. 2 O2-uurist8sò Giī dì - normative or evaluative sciences. 21. Québum or - normal. 2” toppsum or - abnormal. 23.வாலில்லாக் குரங்கு - chimpanzee, 24 சிக்கறை - maze,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/26&oldid=778058" இலிருந்து மீள்விக்கப்பட்டது