பக்கம்:கல்வி உளவியல்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 கல்வி உளவியல் எனவே, கவனிக்கவேண்டிய பொருளே விட்டுவிட்டு வேறு எதிலோ கவன முடைமையே கவனமின்மை என்ருயிற்று. தோளில் ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு அதைத் தேடுவதும், ஒக்கலில் குழந்தையிருக்க அதனே ஊர்முழுவதும் தேடுவதும், வகுப்பிலுள்ள மாளுக்கன் ஆசிரியர் வினவுக்கு வால் மாத்திரம் நுழையவில்லை!" என்று மறுமொழி கூறுவதும் எதல்ை? கவன மின்மையே. உடல் நலமின்மை, நல்ல காற்றின்மை, ஒலிக்குறைவு, உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தட்டுமுட்டுக்கள், அதிக நேரம் கற்பித்தல், மனம் வேறென்றில் ஈடுபடாதிருத்தல், கடினமான பாடம், தவருண கற்பித்தல் முறை, சிறுவர்களின் சிறு குறும்புகள், பாடத்தைப் பற்றிய முன்னறிவின்மை, பற்றின்மை போன்றவை கவனமின்மைக்குக் காரணங்களாகும். கவனக் கலைவு : தொடர்ந்து நடைபெறும் கவனத்தைச் சிதைவுறச் செய்வதே கவனக் கலைவு 49 என்பது. அஃதாவது கவனத்தை ஒரு பொருளினின்றும் இழுத்து மற்ருென்றில் செலுத்துவது. இதனல் பல செயல்கள் தடைப்படுகின்றன. மந்திரவாதிகள் இம் முறையைக் கையாண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். கவனக் கலைவினை விளைவிக்கும் பொருள் கவனிக்கும் பொருள் கொண்டுள்ள அதே புலன்களைத் தாக்கினல், கவனம் அதிகமாகத் தடைப்படும். இதற்குக் காரணம் இரண்டாம் தூண்டல் கவனத்தை இழுப்பதும், இத்துண்டலின் வலிமையால் முதல் தூண்டலின் செயல் மயங்குவதுமேயாகும். கவனக் கலைவு பெரும்பாலும் அகவயமான கூறுகளாலேயே ஏற்படுகின்றது. மனக்கவலைகள், தெளிவற்ற அச்சங்கள் ஒருவருடைய வேலைக்கு இடையூறுகளாம். கவனக்கலைவில்ை திறமை குன்றுகிறது என்பது வெளிப்படை. ஒலி, சந்தடி மிகுந்த சூழ்நிலையில் வேலை செய்வதற்கு அதிக ஆற்றல் செலவாகின்றது. அமைதியான சூழ்நிலையினின்று வந்தவர்கள் இத்தகைய சூழ்நிலையில் இன்னும் அதிகமான ஆற்றலைச் செலவிடுகின் றனர். கவனக் கலைவினைக் கட்டுப்படுத்துதல் : புறத் தூண்டல்களின் தோற்றுவாய்களை நீக்குவதால் கவனக் கலைவினை ஒரளவு தடுக்கலாம். பள்ளிச்சூழ்கிலேயில் உரத்த ஒலிகளும் கெட்ட நாற்றங்களும் கூடா. ஆயினும், வெளித்துண்டல்களைக் கட்டுப்படுத்துவதைவிட, உட்கட்டுப்

  • o *suars såsosł-distraction.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/260&oldid=778060" இலிருந்து மீள்விக்கப்பட்டது