பக்கம்:கல்வி உளவியல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 239 பாடு மிகவும் வேண்டப்பெறுவது. கவனக்கலவு பாடத்தில் கவர்ச்சி யின்மையால் நேரிட்டால், ஊக்கு நிலையை ஆராய்ந்து அதற்கு முறையீடு செய்யவேண்டும். கவனக் கலைவு ஏற்படுங்கால் தூண்டல்களுக்கும் செயல்களுக்கும் போராட்டம் நிகழ்கின்றது. இதில் அதிக ஆற்றல் செலவாகின்றது. அடக்கமுடியாத தூண்டல்கள் கவனக் கலேவிற்குக் காரணமாயின் , அவற்றை அப்பொழுது அரைமனத்துடன் விட்டுக்கொடுத்து, பிறகு காலமும் இடமும் அறிந்து அதனை மேற்கொள்ளல் சாலப் பயனுடைத் தாம். சற்று ஒய்வுகொண்டால், கவனம் மீட்டும் எழும். புலன் காட்சி அறிவு வளர்ச்சிக்குப் புலன்களின் பயிற்சி மிகவும் இன்றியமை யாதது என்று முன்னர்க் கூறிளுேம்.’ இவண் அதனை மீட்டும் ஒருமுறை படித்துப் பயன் பெறுக. ஒரு குழந்தையின் அனுபவம் வளரவளர அது தன் புலன் உணர்ச்சி* களுக்குப் பொருள் காண்கின்றது; விளக்கம் பெறுகின்றது. நாளடைவில் குழந்தை புலன் உணர்ச்சிக்கு அதிகக் கவனம் செலுத்தாது அதன் விளக்கத்திலேயே கருத்தினைச் செலுத்துகின்றது. அநுபவத்திற் கேற்பப் புலன் உணர்ச்சிகளின் விளக்கம் பெறுதலே புலன்காட்சி: என வழங்கப்பெறுகின்றது. முதன்முதலில் ஒரு குழந்தை மாங்கனியைப் பார்க்குங்கால், அது மன உணர்ச்சி, காட்சியுணர்வு, ஊற்றுணர்வு, சுவையுணர்ச்சி போன்ற புலன் உணர்ச்சிகளைப் பெறுகின்றது. அடுத்த முறை அது மாங்கனி யைக் காணும்பொழுது, அதன் முதல் அநுபவத்தால் அதன் புலன் உணர்ச்சிகள் சிக்கல்ாகின்றன். குழந்தை அக்கனியின் சுண்வயை கினை வில் வைத்திருக்கின்றது; உண்பதற்கு அது கன்ருக இருக்கும் என்பது அதற்குத் தெரியும். இறுதியாக அது புலன் உணர்ச்சிகளில் கவனம் செலுத்துவதில்லை ; ஆனால், அதன் புலன் காட்சியில் கவனம் செலுத்து கின்றது ; அக்காட்சி அது உண்ணக்கூடிய ஒருபொருள் என்பதை உணர்த்துகின்றது. இம்மாதிரியான செயல்முறையில் குழந்தை தன் அனுபவக் குறைவினல் புலன் உணர்ச்சிகளுக்குத் தவருன விளக்கமும் பெறுகின்றது. iெ_T புலன் aெtion புலன்காட்சி. perception.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/261&oldid=778062" இலிருந்து மீள்விக்கப்பட்டது