பக்கம்:கல்வி உளவியல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கல்வி உளவியல் காட்சிக்குப் புலன்உணர்ச்சி மூலமாக அமைவதைப் போலவே, கருத் துக்குச் சாயல் அடிப்படையாக அமைகின்றது. ஆறுவகைப் புலன் உணர்ச்சிகளைப் போலவே ஆறுவகைச் சாயல் களும் உள்ளன. அவை: காட்சிச்சாயல் (எ-டு) படுக்கையறை, ஒரு நண்பன் , மோட்டார். கேள்விச் சாயல் (எ . டு ஒரு குரல், பொறியொலி, காய்குரைத்தல். மனச்சாயல் (எ-டு; தவிட்டுமணம், மல்லிகைமணம், பலகாரமணம். சுவைச்சாயல்; (எ . டு இனிப்புப் பொருள், மிளகாய்ச் சட்னி, ஓமப்பொடி, ஊற்றுச் சாயல் ; (எ.டு.) மயிர்பட்டுணர்ச்சி*7, கம்பளத்தின் உணர்ச்சி, புனிற்றிளங்குழவியைத் தொடும் உணர்ச்சி. தசை இயக்கச் சாயல் ; (எ-டு: எழுதுதல், பந்தடித்தல், சுமையைத் தாங்குதல். மக்கள் பல்வேறுவகைப் புலன் உணர்ச்சிகளைப் பெறு வதைப்போலவே பல்வேறுவகைச் சாயல்களையும் பெறுகின்றனர். மேலே கூறிய எடுத்துக்காட்டுக்கள் ஒவ்வொன்றிலும் கூறிய பொருள்களை கேரில் தொட்டோ, பார்த்தோ, சுவைத்தோ அவற்றைப்பற்றி அறிந்தால் அந்த மனச் செயல் புலனுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட புலன் அறிவு (Sense.perception) ஆகும். அவ்வாறன்றி இப்பொருள் நம்முன் இல்லாதபொழுது அவற்றை அனுபவிப்பதுபோன்ற உணர்ச்சிக்குக் 'கற்பனை" என்று பெயர். இதல்ை ஒவ்வொரு பொறியுணர்ச்சிக்கு ஏற்பக் கற்பனையும் உண்டு என்று அறிகின்ருேம். புலன் உணர்ச்சியும் சாயலும் : சாயல்கள் அனுபவிப்பதிலும் பயனிலும் புலன் உணர்ச்சிகளைவிடத் தாழ்ந்தவையே. எவ்வாறு தாழ்ந் தவை என்பதை ஈண்டு ஆராய்வோம். (1) புலன் உணர்ச்சி உண்மைச் சூழ்நிலையினின்றும் தோன்றுவது. சாயல் இத்தகைய பின்னணியினின்றும் பிரித்தெடுக்கப்பெற்றது. ஆதலால், சாயல் துண்டுபட்டதும் தொடர்பற்றதுமாகத் தோன்று கின்றது. (2) உறைப்பிலும்" இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. புலன் உணர்ச்சி மனத்தைத் தாக்குவதைப்போல் சாயல் தாக்குவதில்லை. அலை கடலை கேரில் பார்க்கும்பொழுது அத்துண்டல் கம் மனத்தை அலைப்பது போல் அதன் சாயல் கம்மைத் தாக்குவதில்லை. அங்ங்னமே இன்னிசைக் கச்சேரியும் கண்கூச்செறியப் பாயும் மோட்டார் விளக்கின் ஒளியும்போல் அவற்றின் சாயல்கள் கம்மைத் தாக்குவதில்லை. {3} இரண்டிற்கும் தெளிவிலும் வேறுபாடு உண்டு. சாயல்கள் புலன் உணர்ச்சிகளைவிடத் தெளிவற்றவை ; மங்கித் தோன்றுபவை. “ son-idea. “ odiour.g-velvet. * * *-opto-intensity.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/264&oldid=778068" இலிருந்து மீள்விக்கப்பட்டது