பக்கம்:கல்வி உளவியல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கல்வி உளவியல் பாற்கடல், பொன்மலை, கற்பகத்தரு, காமதேனு. இவை முன்னேய அனுப வங்களை அடிப்படையாகக் கொண்டவை. சிறுகதை ஒவியங்கள், புதினங்கள், அறிவியல் கொள்கைகள், கவிதைகள் ஆகியவை யாவும் ஆக்கக் கற்பனைக்கு எடுத்துக்காட்டுக்களாகும். பகற்கனவும், கனவும் படைப்புக் கற்பனையின் தோற்றங்களே. காம் வாழ்க்கையில் கொள்ளும் உயர்ந்த குறிக்கோள்களும், குழந்தைகளின் பாவனைகளும் படைப்புக் கற்பனையின் கூறுகளே. சிந்தனையிலும் இக்கற்பனைக்குச் சிறந்த இடம் உண்டு. ஆக்கக் கற்பனையை மேலும் மூவகையாகப் பகுத்துப் பேசலாம். (1) பயன்வழிக் கற்பனை' ; சீமை இலங்தைப்பழம் பூமியில் விழுந்ததைக் கண்டு புவியீர்ப்பு விசை விதியைக்கண்ட சர் ஐசாக் நியூட்டனும், நீராவிப் பொறியைக் கண்டறிந்த ஜேம்ஸ் உவாட் ஸ்டீவென் சனும், கம்பியில்லாத்தந்தி" யைக் கண்டறிந்த மார்க்கோனியும், பேசும் படத்தைக் கண்டறிந்த தாம்ஸ் ஆல்வா எடிசனும், ஆகாயவிமானத் தைக் கண்டறிந்த ரைட் சகோதரர்களும் நுண்ணணுப்பெருக்கிக? தொலை நோக்கி , ஒலி வாங்கில், தந்தி போன்ற சாதனங்களைக் கண்டறிந்த அறிவியல் மேதைகளும் பயன்வழிக் கற்பனைகளைக் கையாள் பவர்கள். (2) முருகுணர்கற்பனை" கவிஞர்களும், இசைவாணர்களும் ஓவிய நிபுணர்களும், சிற்பத்திறன் மிக்கவர்களும், சுதை வேலைக்காரர் களும், வண்ணவேலைத்திறன் படைத்தோரும் முருகுணர் கற்பனையாளர் கள் ஆவர். கம்பர், சயங்கொண்டார் போன்றவர்களின் கவிதைத் திறனும் இரவிவர்மா போன்றவர்களின் கைவண்ணமும் அவர்களுடைய முருகுணர் கற்பனையின் பயனே. மேற்கூறிய இரண்டு கற்பனை வகைகளையும் படைத்தல், கொள்ளு தல் என்றும் பாகுபடுத்தலாம். புதிதாக ஒரு பொறியினைப் புனைந்தியற்றி விளக்குதல் பயன் வழிப் படைப்பாக்கக் கற்பனையாகும். பொறியியல் மாளுக்கன் அவ்விளக்கத்தைப் புரிந்து கொண்டு தானும் அதனை இயற்ற முயலுதல் பயன் வழிக் கொள்ளும் ஆக்கக் கற்பனையாகும். இராம -fi găr - thinking. **uusiragă abuar - pragmatic imagina 2 * سیمیایی tion. 54 சீமை இலங்தைப் பழம் - apple. க.க கம்பியில்லாத் தந்தி - wireless. o 6 go, sn usluors rúo - aeroplane. 57 நுண்ணணுப் பெருக்கி - microscope. 58தொலை நோக்கி - telescope. 5 °gs) surfää- microphone. 80s; - telegraph. , 61.905&sori sj, Lào - aesthetic imagination.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/266&oldid=778072" இலிருந்து மீள்விக்கப்பட்டது