பக்கம்:கல்வி உளவியல்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 245 இலக்குமணர்களும் சீதாப்பிராட்டியும் சித்திரகூடத்திற்குப் போளுர்கள் என்ற செய்தியைத் தெரிவிக்க வந்த கம்பன் மஞ்சுசூழ் சித்திரகூடமல' என்பதை, "குளிறும் வான்மதிக் குழவிதன் சூல்வயிற் ருெளிப்பப் பிளிறு மேகத்தைப் பிடியெனப் பெரும்பனைத் தடக்கைக் களிறு நீட்டுமச் சித்திர கூடத்தைக் கண்டார் 82 என்று கூறுகிறன். இதில் கூறப்பெற்றுள்ளது கம்பனின் முருகுனர் வகை படைப்பாக்கக் கற்பன. இப்பாடலை மாளுக்கன் படித்து ஒளி விடும் பிறைச்சந்திரன் கருமேகத்தின் கருப்பத்தில் இருப்பதையும், அது வெளிப்படுங்கால் மேகங்கள் இடிப்பதையும், இவ்வொலியினைக் கேட்கும் ஆண்யானை தன் பெண்யானைதான் பிளிறுகின்றது என்று எண்ணித் தன் துதிக்கையை நீட்டுகின்றதையும் கண்டு மகிழ்தல் முருகுனர் வகைக் கொள்ளும் ஆக்கக் கற்பனையாகும். (3) கனவு வகைக் கற்பனை ; இது கனவென்றும், பகற்கன வென்றும் இருவகைப்படும். கனவு உண்மை வாழ்க்கையில் பெறமுடி யாதவற்றைப் பெறும் வகை என்றும், வருங்காலத் திட்டம் வகுத்தல் என்றும், அரைகுறையாகச் சிந்தித்த பிரச்சினைகளின் முடிவுத்தோற்ற மென்றும், நம் உற்ருருக்கு நிகழ்வதை கேரில் அறிவதென்றும் பலவித மாகக் களுத் திறம் உரைப்பர். பகற்கனவு வெற்றிக்கனவென்றும், துன்பக் கனவென்றும், கவலைக் கனவென்றும் மூவகைப்படும். கனவு ஒருவகைத் தற்காப்பு அல்லது விலகு முறை?? என்று உளவியல் அறிஞர் கள் கூறுவர். கற்பனையின் நன்மை தீமைகள் : நம்முடைய அன்ருட வாழ்க் கையில் கற்பனை பல குறிப்பிடத்தக்க முறைகளில் முக்கியமான செய லாகத் திகழ்கின்றது. முதலாவது : அது செயலுக்கு உற்றதொரு வழிகாட்டியாகத் துணைசெய்கின்றது. நமக்கு எதிர்காலத் திட்டங்களை வகுக்கத் துணைபுரி கின்றது. எனவே, கற்பனை அரசியல் நிபுணர், அறிவியல் அறிஞர், சமூகச் சீர்திருத்தவாதி, போர்த்தலைவன் ஆகியோருக்குப் பயன் படுகின்றது. 8.2 கம்பரா-அயோத்வனம்புகு-47. தற்காப்பு அல்லது விலகு முறை - defence or escape mechanism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/267&oldid=778074" இலிருந்து மீள்விக்கப்பட்டது