பக்கம்:கல்வி உளவியல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 247 யமையாதது என்பது பெறப்படும். கீழ்க்கண்ட முறைகளால் பள்ளியில் கற்பனை வளர்வதற்குத் துணை செய்யலாம். (1) கற்பனையைத் தூண்டுவித்து வளர்ப்பதற்கு விளையாட்டு எண்ணற்ற வாய்ப்புக்களை அளிக்கின்றது. குழந்தைகளும் விளையாட்டை இயல்பாக விரும்புகின்றனர். விளையாட்டில் சிறுவன் பல செயல்களை கடிக்கின்ருன். தன் முன்னுள்ள எப்பொருளையும் தான் வேண்டும் பொரு ளாகப் பாவித்துக்கொள்ளுகின்ருன். குழந்தைகள் விளையாடுவதற்கு ஆசிரியர் நல்ல வாய்ப்புக்கள் தருதல் வேண்டும். (2) பாட ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொரு பாடத்தையும் கற்பனையைத் தூண்டி அதனை வளர்ப்பதற்கேற்றவாறு கற்பிக்கலாம். தொடக்க ஆண்டுகளில் களிமண் வேலை, ஓவியம் வரைதல், தாள்வெட்டுதல், படங் களுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற வேலைகளை மேற்கொள்ளலாம். மொழிப்பாடத்தில் கதைகேட்பதும், கதைசொல்லுவதும் கற்பனைக்குச் சிறந்த துணையாம். சில கதைகளை நாடகமாகவும் நடிக்கச் செய்யலாம். வரலாறு, கிலவியல்' போன்ற பாடங்களைப் பயிற்றும்பொழுது படங்க ளாலும் சிறு விவரங்களை யெல்லாம் வருணிப்பதாலும் சிறுவர்கள் தொலை விலுள்ள இடங்களையும் கடந்த காலங்களையும் கற்பனையால் காண்பர். ஆளுல், ஆசிரியர் மனப்போக்குதான் இதைச் சரியாக அறுதியிடும் கூருகும். (3) சற்று வளர்ந்த சிறுவர்களுக்குக் கற்பிக்கப்பெறும் இலக்கியம், கவிதை போன்ற பாடங்களால் கற்பனையும் பாகலம் வியத்தலும் வளர்கின் றன. ஆசிரியர்கள் வெறும் சொற்களுக்குப் பொருள் கூறி பாட்டைச் சிதைக்காமல், அதனைச் சுவைப்பதில் பயிற்சி தருதல் வேண்டும். அறிவி யலைக் கற்பதாலும் கற்பனை வளர்கின்றது. பொருள்களை ஆராய்தல், உற்றுநோக்குதல், கருதுகோள்களை ஆக்குதல், முடிவுகளைச் சோதித் தல் போன்றவை கற்பனைச் செயல்களில் பயிற்சி தருபவை. (4) படைப்புக் கற்பனையை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர். பள்ளியிலும் குழந்தையின் படைப்புச் செயல்கள் மிகவும் போற்றப்பெறு தல் வேண்டும். ஆசிரியர் பாடப்புத்தகத்திலிருந்து படித்துச்சொல்லும் பொருளைக் குழந்தைகள் திரும்பவும் சொல்வது கல்வியாகாது. இத்தகைய கிளிப்பிள்ளைப் பயிற்சி அறவே ஒழியவேண்டும். இக்காலப் பள்ளிகளில் பள்ளியிதழ்கள் வெளியிடுதல், நாடகம் நடித்தல், விழாக்கள் அமைத்தல், மகிழ்ச்சிச் செலவுகள், பொருட்காட்சிகள் அமைத்தல் போன்ற வாய்ப் 64 issosolué - geography. 65 &Q5 g|35m it - hypothesis.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/269&oldid=778080" இலிருந்து மீள்விக்கப்பட்டது