பக்கம்:கல்வி உளவியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கல்வி உளவியல் அங்ஙனமே, மக்கள் எல்லாவித நிலைமைகளுக்கேற்றவாறு எங்ங்னம் எதிர்வினை புரிகின்றனர் என்பதையும் ஆராய்கின்றனர்; இத்தகைய வாய்ப்புக்களே ஆய்வகத்தில் ஏற்படுத்தி, அவற்றில் தனியாள் புரியும் துலங்கல்களைக் கருத்துடன் பதிவு செய்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் வளர்ந்த மனிதனின் செயல்களை (எ-டு-புலன்காட்சி, கற்பனை, சிக்தனை, கவனம், உள்ளக் கிளர்ச்சி, பற்று, முயற்சி போன்ற வற்றை) விளக்குவர். ஆகலின், பொது உளவியல் வளர்ந்தவர்களின் செயல்களை விளக்கும் நூலாகும். கல்வி உளவியல் ஒரு வகை நடைமுறை நூல்; பயன்முறை உள வியல்", பொது உளவியலில் கண்ட உண்மைகள் கல்வித்துறையில் கையானப்பெற்றன. இதனுல் கற்பவர்களின் இயல்பும் செயல்களும் விளக்கம் பெற்றன. இதல்ை அது கற்றலுக்கும் பயிற்றலுக்கும் உரிய உளவியலாயிற்று, அது சில காலமாகச் செழித்தோங்கித் தனித்துறையாய்ச் சிறப்புற்று வருகின்றது. இன்று அது பொது உளவியலுக்கே சில உண்மைகளை எடுத்தியம்பும் கிலேயையும் பெற்றிருக்கின்றது. குழந்தைகள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள் போன்ற யாவரும் கற்கும் நிகழ்ச்சிகளில் தோன்றும் செயல்களை எடுத்துரைக் கின்றது; கற்றலின் இயல்பு, வகைகள், முறைகள், சாதகமான ஏதுக்கள், கற்றலின் போக்கு முதலிய கூறுகளையும் விளக்குகின்றது. எனவே, கல்வி உளவியல் கல்விக்கலைக்கும் பொது உளவியலுக்கும் இடைப்பட்ட துறை என்று வழங்கினும் தவறன்று. மக்கள் கற்கக்கூடும்; கற்கத்தான் செய்கின்றனர். எனினும், ஒழுங்காகவும் பயனுடனும் கற்க உளவியல்அறிவு வேண்டும். கல்வி உளவியல் இன்று குழந்தை உளவியல், குமாரப்பருவ உளவியல், கனகலத்துறை, சமூக உளவியல் ஆகிய துறைகளினின்றும் பல தகவல். களைப் பெறுகின்றது. அன்றியும், அது சமூக மனிதவியல்’, மருத்து வத்துறை, உளநோய் மருத்துவத்துறை, உயிரியல், சமூகவியல்’ போன்ற துறைகளினின்றும் தனக்குப் பொருத்தமான தகவல்களைப் பெற்றுக்கொன்கின்றது. பொதுஉளவியலோடு வைத்து ஒப்பிட்டால், கல்விஉளவியல் அண்மையில் தோன்றியது என்பது தெளிவாகும். மக்கள் ஆதியிலிருந்தே ஒருவரை யொருவர் கவனிக்கும் திறனுடையராயிருந்தனராதலின்,


عة معيّة -رنيهتمة عي بمجمومتر

ಕ್ಲಿàಆ# உளவியல் . applied psychology. ****ps bogsfluê - social anthropology. 27a-argoris logogasā āsop – psychiatry. ** *ēgseous” – sociołogy,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/27&oldid=778082" இலிருந்து மீள்விக்கப்பட்டது