பக்கம்:கல்வி உளவியல்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 கல்வி உளவியல் புக்கள் இருப்பதால், குழந்தைகளின் கற்பனையை நன்முறையில் வளர்க்க லாம். பள்ளியில் முறையணந்த வேலையால் மாளுக்கர்களின் கற்பனை யைச் சிதைத்துவிடாமல், மேற்கூறிய முறைகளாலும் பிறவற்றலும் அதனை நன்கு வளர்க்க வேண்டும். சிந்தனை சிந்தனையும் கற்றலின் ஒரு கூறு. சிந்தனேதான் மக்களை மாக்களி னின்றும் வேறுபடுத்துவது. விலங்குகள் எந்த அளவுக்குச் சிந்திக்கின் றன என்பதை நாம் அறியோம். எனினும், இத்துறையில் மேற்கொள்ளப் பெற்ற சோதனைகளிலிருந்து உயர் இனத்தைச் சேர்ந்த மனிதக் குரங்கு கள் சிறிதளவு சிந்திக்கின்றன என்பதை அறிகின்ருேம். சிந்தன என்ற சொல்லை வரையறையின்றிப் பல மனச்செயல்களுக்கு வழங்குகின்ருேம். முந்திய செயல்களே கினைத்தல், வருங்காலக் கற்பனை அமைத்தல், இப் பொழுது செய்யவேண்டியதைத் திட்டம் செய்தல் ஆகியவையும் சிந்தனை என்று வழங்குகின்றன. ஆளுல், நாம் இங்கு சிறப்பித்துக் கூறும் சிங் தனை ஒரு சிக்கலான மனச் செயலாகும். நம் பழைய முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினே தோன்றில்ை சிந்தனே தொடங்குகின்றது. சிந்தனை யின் மூலம் தொடர்பையும் தொடர்புப் பொருளையும் அறிகின்ருேம். பாம்பு, கீரி என்ற இரண்டு சொற்களையும் ஒருவர் சொல்லக் கேட்பின் "பகைமை என்று நம் மனம் எண்ணுகின்றது; கொடுத்திருக்கும் இரண்டு பொருள்களையும் தொடர்புறுத்த கினைக்கின்றது. இதைத் தொடர்பறிதல்87 என்பர். ஒரு பொருளையும் தொடர்பையும் கொடுத்தால் நம் மனம் அத் தொடர்பிலுள்ள மற்றெரு பொருளே கினைக்கின்றது. பாம்பு பகைமை’ என்று கூறியவுடன், நம் மனம் கீரி என்று நினைக்கின்றது. இதைத் தொடர்புப் பொருளறிதல்" என்று வழங்குவர். மானிட வாழ்க்கையின் தரமும், மானிட இனத்தின் கலமும் முன்னேற்றமும் நம்முடைய சிந்தனை யைப் பொறுத்தவை. நம்முடைய கற்பனையின் திறத்தினுல்தான் நம் மிடையே புதியன புனைவோர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்கின் றனர் என்பதை முன்னர்க் கூறினேம். ஆனல், இத்தகைய அறிவின், அருஞ்செயல்கள் யாவும் ஒரு குறிப்பிட்டவகையைச் சேர்ந்த கற்பனையால் தான் இயன்றன என்பதை நாம் குறிப்பிடத்தான் வேண்டும். விடுதலை யுடன் இயங்கும் வளமான கற்பனை இருக்கத்தான் வேண்டும். ஆனல், 86gpanpuázrág Ésuá) - formal work. 67Qgru-itufl:6) - educing. relation. 689; r.; Hü Gurgasso educing correlate. 69 Háular Horūsuirá - inventor.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/270&oldid=778084" இலிருந்து மீள்விக்கப்பட்டது