பக்கம்:கல்வி உளவியல்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கல்வி உளவியல் பெறுகின்றன. கருத்து ஓர் அறிவு ஈயும் மனநிலை அது மிக உயர்தர பொருண்மையைக் கொண்டது. இந் நிலையில் அதனை நம்முடைய எண் ணத்தைத் தெரிவிக்கும் ஒரு கோலம் அல்லது ஏற்பாடு எனக் கருதலாம். அது புலன் காட்சியாகவும் இருக்கலாம் ; கற்பனையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் ஏதாவது ஒரு பொருளை நோக்கும்பொழுது நாம் காண்பதும் நாம் பொருத்தும் கோலத்தைப் பொறுத்தது. இங்குள்ள வரைப்படத்தை (படம் 28) மடிப்பு வெளிப்புறமாகவோ உட்புறமாகவோ & உள்ள ஒரு மடித்த தாள் எனக் கருதலாம்; அல்லது | ஒரு கணித நிபுணருக்கு அது ஒரு பக்கத்தைப் பொது வாகக் கொண்ட இரண்டு சமமான இணைகரங்களா கத் தோன்றலாம். எல்லாம் பார்ப்பவரது மனநிலை யைப் பொறுத்தது. கருத்துக்களை உண்டாக்கும் கம் முடைய திறனைப் பொருத்தே கருத்துகிலச் செயல் முறையும் பொதுமைப்படுத்தும் செயல்முறையும்?" நடைபெறுகின்றன. கருத்து என்பது பொதுமைப் 28 قاسان ததப்பெற்ற சாயல்; அது கேர் அனுபவத்தின் அடிப்படையில் அமைக் திருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி நம் முடைய அனுபவங்களனைத்தினையும் அது தாங்கி கிற்கின்றது. நாய்' என்ற கருத்து (பொது உணர்வு) ஒரு குழந்தையிடம் எவ்வாறு உண்டா கின்றது என்பதை முன்னர்க் கூறியதை எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம். பொருள் கருத்துக்களைப் பயன்படுத்துதல் கற்றலுக்கு இன்றியமை யாதது. கனவு மையத்தில் தெளிவு படுத்துவதற்குச் சாயலைவிட கருத்து மிகப் பெரிது. கருத்து ஒரு நுண் பொருள். பொதுமைப் படுத்துதலால் பெறும் சிக்கனத்தால் சிந்தனை சிறப்பாக நடைபெறு கின்றது. புலன் உணர்ச்சி-புலன்காட்சி.பொது உணர்ச்சி என்ற ஒழுங்கில் கருத்து வளர்கின்றது. (3) குறியீடுகளும் அடையாளங்களும்: குறியீடுகளாலும் அடை யாளங்களாலும் சிந்தனை சிக்கனமாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு குறியீடும் அடையாளத்தின் வன்மையைக் கொண்டுள்ளது; அங்ங்ணமே ஒவ்வொரு அடையாளமும் குறியீடாகவும் கூடும். எனவே, இவ்விரண் டையும் ஒருங்கே ஆராய்வோம். ஒரு குறியீடு பொதுமைக்குப் பதிலாக பயன்படும் தனிப் பிழம்புப் பொருளாகும். பசுவைப்பற்றிய கருத்தை 76 sq5; giff&# Q&Ls) (psop - process of ideation. பொதுமைப் u(§§5% Q&Ausogpsop - process of abstraction. 78 (5solušG - symbol. ச9 அடையாளம் - sign.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/272&oldid=778088" இலிருந்து மீள்விக்கப்பட்டது