பக்கம்:கல்வி உளவியல்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 251. உணர்வதற்குத் தனிப் பசுவை மனத்தில் காண்கின்ருேம். சிந்திக்குங் கால் கருத்துக்களைக் குறியீட்டின் வாயிலாகவே கூறுகின்ருேம். நான்கு" என்னும் சொல் நான் கென்னும் கருத்தைக் காட்டும்; இதே கருத்திற்கு. 4 என்பது வேருெரு குறியீடாகும். சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்தருகில் நான்குசாலைகள் சேரும் இடத்தில் அமைக்கப்பெற்றி ருக்கும் செவ்விளக்கு ஒருபக்கத்தில் தோன்றுங்கால் அப்பக்கத்திலுள்ள வர்கள் சாலையைக் கடக்கக் கூடாது என்பதற்கும். பச்சைவிளக்கு தோன் றியதும் கடக்கலாம் என்பதற்கும் அவை குறியீடுகளாம். குறியீடு. கருத்தைக் காட்டிலும் எளியது; எளிதிலும் பயன்படுவது. எனவே, குறி யீடு மூலமும் சிந்தனையில் சிக்கனத்தைப் பெறுகின்ருேம், குறியீடுகள் நாளடைவில் அடிையாளங்களாகின்றன. அவை சிந்தனைக்கும் செய. லுக்கும் அடையாளங்களாகும். அவை இயக்கத் துலக்கங்களைத் தூண்டு கின்றன. சிவப்பு ஒளியும் பச்சை ஒளியும் அடையாளங்கள். அவை: கம் செய்கையை அறுதியிடுகின்றன ; நாம் என்ன செய்ய வேண்டுமென் பதை அவை குறிப்பிடுகின்றன. எனவே, குறியீடுகள் அடையாளங் களாகிச் சிந்தனைச் செயலைச் சிக்கனமாகத் தூண்டுவிக்கின்றன. ஒரு பெரிய சிக்கலான கருத்திற்குப் பதிலாக ஒரு குறியீட்டை மேற் கொள்ளுவதால் சிந்தித்தல் விரைவாகவும் திறமையாகவும் நடைபெறு: கின்றது. இடையில் சிந்திப்பதை கிறுத்திலுைம் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டியதில்லை. முதலில் ஒரு கருத்தை உணர்வதும் அதனு. டன் ஒரு குறியீட்டை ஒட்டுவதும் பெரிய சிந்தனைச் செயல்களாகும். ஆல்ை, இச் செயலை இயற்றிக் குறியீட்டிற்குப் பொருள் அளித்தபின் இச் சிந்தனையை மீட்டும் இயற்ற வேண்டியதில்லை. ஒரு குறியீடு எதனைக் குறிக்கின்றது என்று கருதி நேரம் கழிக்காமல் அக் குறியீட்டைப் பயன் படுத்துகின்ருேம். கணிதம் ஓர் உயர்ந்த குறியீட்டு மொழி வகையாகும்;. ஆல்ை, அஃது உண்மையில் மற்றெல்லா மொழிகளைப் போன்றதுதான். மொழியும் சிந்தனையும் : சிந்தனைக்கு மொழி பெருந்துணை புரி கின்றது. மொழியிலுள்ள சொற்கள் யாவும் குறியீடுகளே; அச்சொற். களுக்குப் பொருள் உண்டு. அச்சொற்களை வாய்மொழியாகக் கூறலாம் ; எழுதலாம் ; செவிட்டு.ஊமையர் படிக்கும் குறியீடுகளிலும் அமைக்க லாம். மொழி நினைவுகூர்தலை89 எளிதாக்குவதால் அது சிந்தனைக்குரிய செய்திகளைத் திரட்டுவதில் துணைபுரிகின்றது. சொற்களால் அமைக்கப் பெற்ற உண்மைகளையும் விதிகளையும் கினைவிலிருத்துவது எளிது. மேலும், s offièrsloh.if - recall.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/273&oldid=778090" இலிருந்து மீள்விக்கப்பட்டது