பக்கம்:கல்வி உளவியல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 253 மாற்றங்களில் சிந்தனை தவிர்க்க முடியாத தேவையாகின்றது. சிந்தனை யால்தான் பல அரசியல் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிகின்றது. பள்ளி ஆசிரியர் ஒழுங்குமுறை, விழாக்கள், ஆட்டப் போட்டிகள், பிற அமைப்புக்கள் ஆகியவற்றில் அதிகமாகத் துணைசெய்து பெரும்பாலான வற்றை மாளுக்கர் முடிவுக்கே விடுத்து அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும். இரண்டாவது : பலவேறுபட்ட கருத்துக்கள், பழக்கங்கள், நம் பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றையுடைய மக்களுடன் நெருங்கிப் பழகுவதால் சிந்தனை தூண்டப்பெறுகின்றது. வானெலி, செய்தித்தாள் கள், பிரயாண நூல்கள் ஆகியவை பள்ளி வாழ்க்கையில் முதலிடம் பெறல் வேண்டும். அடிக்கடி மாளுக்கர்களை வெளியிடங்களுக்கு அழைத் துச் செல்லவேண்டும். மூன்ருவது: எண்ண வளர்ச்சியில் மொழி முக்கிய பங்கு பெறு கின்றது. சொல் கருத்தின் ஒருவகைக் கைப்பிடியோலாகின்றது என்று ஓர் அறிஞர் கூறுகின்றர். மொழி எங்ங்ணம் சிந்தனைக்குத் துணை புரி கின்றது என்பதை மேலே விளக்கிளுேம். சிந்தனையின் படிகள் : சிந்தனைச் செயலில் ஐந்து படிகள் உள. அவை : (1) ஒரு பிரச்சினையை உணர்தல் நம் வாழ்வில் நேரடியாகக் குறுக்கிடும் பிரச்சினைகளை நாம் நன்ருக உணர்கின் ருேம். ஒரு பிரச்சி னையில் நாம் உணரும் குறையொன்றை, நிரப்பவே சிந்தனை எழுகின்றது. கற்றல் முறைகளிலும், இன்பம் எய்தும் முறைகளிலும் ஒரு குறையைக் கண்டுணர்ந்த பின்னரே சிந்தனை எழுகின்றது. குளிக்கும் அறையில் குழவியுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஒரு சமயம் ' தண், aர் எவ்வாறு வருகிறது?’ என்று எண்ணுகின்றன். இஃது உண்மை யான பிரச்சினை ; இது அவனது விடுப்பூக்கத்தைத் தூண்டுகின்றது. (2) தேவையான பொருந்தக்கூடிய எடுகோள்களைத் திரட்டுதல்: பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கூடிய எடுகோள்களைத் திரட்டவேண்டும். தம்முன் நிற்கும் கிலையை உற்றுநோக்கி ஆராய்தலால் இவற்றைப் பெற லாம். ஆசிரியர் மாளுக்கர்களிடம் ஒழுங்கான முறையில் பழகதததை வளர்த்தால் மாளுக்கர்கள் இத்துறையில் நற்பயன் அடைவர். இவ்வாறு பெற்ற எடுகோள்களை* ஒழுங்கான முறையில் அமைத்தல் வேண்டும். 81 grgéâm or - data.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/275&oldid=778094" இலிருந்து மீள்விக்கப்பட்டது