பக்கம்:கல்வி உளவியல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 255 எனவே, உய்த்துணர்வு என்பது பிற அறிவிலிருந்து பகுத்தறியப்பெற்ற ஒரு புதிய அறிவு. தெரிந்த அனுபவங்கள் புலன்காட்சியாலும் ஏற்பட லாம் ; அல்லது அவை குறியீட்டுவடிவில் கினைவு கூர்தலாலும் ஏற்பட லாம். ஆளுல், உய்த்துணர்வு எப்பொழுதும் குறியீட்டு வடிவிலேயே இருக்கும். நாம் அறையில் ஏதோ ஒரு வேலையில் அதிகநேரம் ஈடுபட்டு விட்டு சாளரத்தின் வழியாக வெளியே எட்டிப் பார்க்கின்ளுேம். வாசலி லுள்ள பரவிய பாதையில் குழிகுழியாக நீர் இருப்பதைக் காண்கின்ருேம்; வானமும் மப்பாக இருக்கின்றது. நாம் மழை வீழ்ந்ததைப்பார்க்காவிடினும் அல்லது கேட்காவிடினும் நாம் நிச்சயம் மழை பெய்திருக்கவேண்டும் என ஊகிக்கின்ருேம். தெருவில் மணியோசை கேட்ட வண்ணமிருக் கின்றது. மரங்களின் மீது புகை மெல்லிய அருவிபோல் எழுகின்றது. இவற்றிலிருந்து எங்கோ தீப்பற்றியிருக்கின்றது என்றும், அவ்விடத்தை நோக்கித் தீயணைக்கும் படையினர் விரைகின்றனர் என்றும் நாம் முடி வுக்கு வருகின்ருேம். ஆய்தவில் இரண்டுவித யுக்தி முறைகளை" மேற்கொள்ளுகின்ருேம். ஒன்று, தொகுத்தறிமுறை""; மற்றென்று, பகுத்தறிமுறை'. எடுத்துக் காட்டுக்களிலிருந்து பொதுவிதியை அறிதல் தொகுத்தறிமுறை. (எ-டு.) குளத்திலும் ஆற்றிலும் பாத்திரத்திலுமுள்ள நீரில் பலகட்டைகள் மிதப்ப திலிருந்து,கட்டைகள் நீரில் மிதக்கும் என்று ஊகிக்கின்ருேம். இரும்புக் குண்டு, நீர், காற்று ஆகியவற்றைச் சூடாக்கி விரிவடைவதைக் காண் கின்ருேம். இவை சடப்பொருள்கள்; எனவே, சடப்பொருள் சூட்டால் விரிவடைகின்றது என்று முடிவு கட்டுகின்ருேம். பகுத்தறி முறையில் மேற்கூறியதற்கு எதிர்த்திசையில் செல்லுகின்ருேம். (எ - டு.) கட்டை கள் நீரில் மிதக்கும்; கடலில் போட்ட கட்டைகள் மிதக்கின்றன: ஆற்று நீரிலும் கிணற்று நீரிலும் போட்டகட்டைகளும் மிதக்கின்றன. பாத்திரத் தில் போட்ட கட்டையும் மிதக்கின்றது. இன்ளுெரு எடுத்துக்காட்டு. சடப்பொருள் சூட்டால் விரிவடைகின்றது. திடப்பொருள் சடப்பொருள் களில் ஒருவகை. இரும்பு திடப்பொருள். ஆகவே, இரும்பு சூட்டால் விரிவடைகின்றது. சோதனையால் இவ்வுண்மை சரிபார்க்கப்பெறுகின் றது: இங்ங்னமே நீர், காற்றிற்கும் சோதனைகள் செய்யப்பெறுகின்றன. மேற்கூறியவற்றை நுணுகி அறிந்தால் தொகுத்தறிமுறையில் இப் படிகளைக் காணலாம் : (1) பிரச்சினையை அறிதல் ; (2) பிரச்சினையை 89நினைவுகூர் - recatl. புெக்தி முறை - technique, 9 தொகுத்தறி முறைinductive method. 92 uć555s, gpsop - deductive method.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/277&oldid=778098" இலிருந்து மீள்விக்கப்பட்டது