பக்கம்:கல்வி உளவியல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 257 வைத்து நாம் மயங்குவதில்லை. அதற்குக் காரணம் நாம் பார்த்த பல கிச்சிலிப்பழங்களையும் திரும்பவும் நினைவுபடுத்திக்கொள்வதே” யாகும். 'கிச்சிலிப்பழக் கருத்தே சாயல் என்பது. கற்பனையைப்பற்றி ஆராய்ந்த பொழுதும் சாயலைக் குறிப்பிட்டோம். சாயல்களே நினைவுச்செயல்களில் செயற்படுகின்றன. கினேவின் கூறுகள் : கினேவில் நான்கு கூறுகள் அடங்கியுள்ளன. அவை: பதிவுபெறுதல்?" அல்லது முத்திரைகளை வாங்குதல், இருத்துதல்" அல்லது கடந்த அனுபவங்களைச் சேமித்தல், மீட்டு மொழிதல்' அல்லது கடந்த அனுபவங்களை கினைவு கூர்தல், மீட்டறி தல்' அல்லது நினைவு கூர்ந்த கருத்துக்களை முன் அனுபவத்தில் அறிந் தவையாக இனங்கண்டறிதல்' என்பவையாகும். இந்தக் கூறுகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. நினைவில் வைத்துக்கொள்ளும் செயலைச் சரியாகவும் விரிவாகவும் பாகுபடுத்தி அறியவும் கினைவை மேம்பாடடையச் செய்யும் முறையை அறியவும் வேண்டுமானல், இவை ஒவ்வொன்றையும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும். பதிவு பெறுதல் : முந்திய அத்தியாயத்தில் கற்றலைப்பற்றிக் கூறிய அனைத்தும் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. அனுபவங்கள் பதிவு பெறுவதற்கும் அல்லது ஏட்டுமுறையில் படித்தவற்றை நன்ருகத் திரும் பக் கூறுவதற்கும் அதிகக் காலம் நினைவில் இருத்துவதற்கும் சில விதி கள் உள. அவற்றுள் உடல் கலம், சோர்வில்லாமையும் கவலையின்மை யும், கவர்ச்சியும் கவனமும், தெளிவாகப் பதிதல், திரும்பத் திரும்பக் கூறுதல், பொருளோடு கூடிய அனுபவமும் செய்திகளும், காலம் இடை யிட்டுத் திரும்பக் கூறுதல், முழுதாகவோ பகுதியாகவோ நெட்டுருச் செய்தல் போன்றவை மிகவும் முக்கியமானவை. ஈண்டு வகுப்பறையில் வற்புறுத்த வேண்டிய பயிற்சிகளை மட்டிலும் கூறுவோம். (1) கற்பதிலும் நெட்டுருச் செய்வதிலும் ஒரு திட்டமான நோக்கம் இருத்தல் வேண்டும். கற்கும் பகுதி கிரந்தரமாக கினைவு கூர்தலுக்கா அன்றி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டிலும் நினைவு கூர்தலுக்கா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பெரும் பாலான மாணுக்கர்கள் ஆண்டு முழுவதும் படிக்காமலேயே இருந்துவிட் டுத் தேர்வுக் காலத்தில் இரவும் பகலும் படித்துக் குழம்பிய கிலேயிலிருக் 9 நினைவுபடுத்திக்கொள் - re-collect. 9 பதிவு பெறுதல் - apprehension. o 8@Gģğlgs) - retention. o ofi-G @torĝ5 & - reproduction. 1905LL-sågsø – recognition. 10.1% oriesirl-flää - identification. க.உ.-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/279&oldid=778102" இலிருந்து மீள்விக்கப்பட்டது