பக்கம்:கல்வி உளவியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 7 உளவியலும் மிகத் தொன்மை வாய்ந்தது. ஆனல் கி.பி. 1879-இல் வில் ஹெல்ம் வுண்ட் லீப்ஸிக் பல்கலைக் கழகத்தில் உளவியல் ஆராய்ச்சி கிலேயத்தைத் தொடங்கியநாள்தொட்டு இக் கலைக்கு அறிவியல்’ சிறப்புக் கிடைத்தது. ஆனல், கல்வி உளவியல் இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்திலிருந்துதான் அறிவியல் நிலையை அடைந்தது. உளவியலின் நோக்கங்கள் மக்கள், விலங்குகள் ஆகியவற்றின் செயல்களைப்பற்றிய விவரங்களே ஒழுங்காகவும் திட்டமாகவும் முற்றிலும் வரையறுத்து விளக்க முயல்வது உளவியல். அதன் நோக்கங்கள் யாவை ? நம்முடைய நடத்தையை அறிந்து அதன்மேல் ஆட்சி கொள்வது ஒன்று; பிறருடைய கடத்தையை அறிந்து அதன்மேல் ஆட்சி கொள்வது மற்றென்று நம்முடைய நடத்தையையும் பிறருடைய நடத்தையையும் அவற்றின் பொருட்டே அறிதல் இன்னென்று; மக்களின் இயல்பை அறிந்ததன் மூலம் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது பிறிதொன்று; உள வியலறிஞனுக்கு மனிதன் எவ்வாறு தோன்றுகின்ருன் என்பதை அறிவது வேருென்று பயிற்றலில் ஆசிரியருக்கு மிகவும் பயன்பட்டு அதற்குத் துணையாக நிற்பது நாம் அறிய வேண்டியதொன்று. இவற்றைச் சற்று விரிவாக ஆராய்வோம். தன்னப்பற்றிய மெய்யறிவு. உண்டாதல் : தன்னைப்பற்றிய மெய் யறிவு மிகவும் இன்றியமையாதது ; ஒவ்வொருவருக்கும் முக்கியமாக வேண்டப்பெறுவது. உன்னையே அறிந்துகொள்’ என்பது ஆன்ருேளின் அருள்மொழி. நமது வாழ்க்கைத் தொழிலும் நிலையும் எங்ங்ணமிருப்பினும், வாழவேண்டியவர்கள் நாம் என்பது ஒருதலை. மிகச் சிக்கலான தனிவீற்றி னைக் கொண்ட நாம் எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும், நடத்தை யிலும் வேறுபடுகின்ருேம். உளவியல் என்பதோ பொதுவான முறை களைப்பற்றிக் கூறும் ஒரு துறை. அதனல் கம் சொந்தப் பிரச்சினை களுக்கு உளவியலைக் கொண்டு தீர்வும் விளக்கமும் காண்பதென்பது இயலாத தொன்று. எனினும் எண்ணம், உணர்ச்சி, நடத்தை போன்றவற்றைப்பற்றிப் படிப்பதல்ை அறிந்துகொள்ளுங் கருத்துக்களை நமது சொந்தப் பிரச்சினையிலும் பயன்படுத்தலாம். நமது உடல், உள்ளக் கிளர்ச்சி, சமூகம், சிந்தனை முதலியவற்றில் எழும் தேவைகளை யொட்டி 2 9 5í$s$(Aggsdú, sjsisri. - Wiihetm Wundt. . sogoffs; so - individuality.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/28&oldid=778104" இலிருந்து மீள்விக்கப்பட்டது