பக்கம்:கல்வி உளவியல்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1258 கல்வி உளவியல் கின்றனர். தேர்வுக்குப் பல நாட்களுக்கு முன்னரே கன்கு விளக்கம் பெறும் வரையில் கற்று, சிறிது காலம் இடையிட்டுத் திரும்பவும் அதில் பயிற்சி பெற்ருல் கலம் பயக்கும். கிரந்தரமாக நினைவிலிருத்த வேண்டிய வற்றை அடிக்கடித் திரும்பக் கூறவேண்டும்; கற்கும் பகுதிகளின் இயைபுகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். - - (2) தெளிவாகப் பதியவை அதிகக் காலம் நீடித் திருக்கும். முக்கிய மானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டிலும் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். (3) மாளுக்கர்கள் ஒருவரையொருவர் வினவும் விளுக்களுக்கு விடை காணல் வேண்டும். ஒருவருக்கு விடை தெரிந்திருந்தால், அது மீள்நோக்காக' அமைகின்றது ; தெரியாதிருந்தால் அது கற்பதா கின்றது. இன்னும் மாணுக்கர்கள் எத்தனையோ முறைகளைக் கையாளு கின்றனர். அவை யாவும் பதிவித்தலில் பங்கு பெறுகின்றன. நன்னூலாரும், 'அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்.' என்று கூறியிருத்தல் ஈண்டு சிந்தித்தற்குரியது. (4) ஆசிரியரைப் பொறுத்தவரை கற்பிக்கும்.பாடத்தை எல்லாப் புலன்களும் உணரும் வண்ணம் கற்பிக்க வேண்டும். புலப்பயிற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்கள் அறிபவை நன்ருகப் பதிகின்றன, கன்கு நினைவிலிருத்தப் பெறுகின்றன என்பதை அறிவோம். எடுத்துக்காட் டாக, ஆங்கிலப் பாடத்தில் புதிய சொற்களைக் கற்பிக்கும்பொழுது ஆசிரியர் சொல்லை ஒலிக்கின்ருர்; எழுத்துக் கூட்டுகின் ருர்; வகுப்பிலுள்ள வர்களை ஒலிக்கச் செய்கின்ருர்; எழுத்துக் கூட்டச் செய்கின்ருர். பிறகு தான் கரும்பலகையில் எழுதி, மாளுக்கர்களைப் பார்த்தெழுதச் செய் கின்ருர், இங்ங்ணம் மாளுக்கர்கள் பார்த்தலாலும், கேட்டலாலும், எழுது வதாலும் அவர்கள் முறையே காட்சிப்புலன், கேள்விப்புலன், தசை யியக்கப்புலன் அனுபவங்களைப் பெறுகின்றனர். இப்பல்.புலன் தாக்குதல் அச்சொல்லை கன்கு மனத்தில் பதிக்கின்றது. இருத்துதல் : இருத்துதல்' மனிதருக்கு மனிதர் மாறுபடு கின்றது. இருத்தும் திறன் அப்பொருள் மூளையில் விழும் துலங்கல் 102 மீள் நோக்கு - review. 108கன்னுரல் - சூத். 45. 104இருத்துதல் - Tetention.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/280&oldid=778106" இலிருந்து மீள்விக்கப்பட்டது