பக்கம்:கல்வி உளவியல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 259 சுவடுகளைப் பொறுத்தது. மனத்தில் இருத்தப்பெற்றுள்ளவை அங்கு மன கிலைகளாகப் படிந்திருக்கின்றன. இளமையில் நிகழ்ந்தவற்றை நாம் இப்பொழுது நினைவு கூர்வதிலிருந்து அவ்வனுபவங்கள் மனத்தில் இருத்தப்பெற்றிருக்கின்றன என்பது திண்ணம். நாம் வழிபாட்டுப் பாடல்களைப் பல நாட்கள் சொல்லாவிடில் அவை மறந்து போனவை யாகத் தோன்றலாம். அவற்றை மூன்று நான்கு முறை சொன்னவுடன் அவை மீட்டும் பாடமாகி விடுகின்றன. இதிலிருந்து முன்னனுபவங்கள் மனத்தில் ஒருவாறு இருத்தப்பெறுகின்றன என்பது தெரிகின்றது. இதைத்தான் இருத்துதல் என்று வழங்குகின்ருேம். புலன் உணர்ச்சியின் பயனக மனத்தில் பல சாயல்கள் தோன்று கின்றன. இவற்றை நினைவுச் சாயல்கள்'97என்று வழங்குகின்ருேம். இவை ஒவ்வொரு புலனுக்கும் உண்டு. எடுத்துக்காட்டாக, திருப்பதி: என்ற சொல்லேக் கேட்டவுடன் பல்வேறு சாயல்கள் தோன்றுகின்றன. சிலரிடம் மலை, கோவில் இவற்றின் பார்வைச் சாயல் எழுகின்றது; சிலரிடம் கோவிந்தா, ஏழுமலை ஆண்டவா என்ற கேள்விச்சாயல் தோன்றுகின்றது; சிலரிடம் மலையேறுங்கால் தசைகளில் உண்டாகும் களப்புச்சாயல் ஏற்படுகின்றது; சிலரிடம் குளிர்ந்த மலைக்காற்றின் ஊற்றுச்சாயல் உண்டாகின்றது. இங்ங்னமே சிலரிடம் பகலவன் கதிர் களின் வெப்பச்சாயலும், சிலரிடம் வேப்ப மரங்களின் நாற்றச்சாயலும், சிலரிடம் மலையில் உண்ட கட்டமுது பிரசாத வகைகளின் சுவையின்ப மும் தோன்றுகின்றன. இவை யாவும் புலன் உணர்ச்சியின் பயனுக ஏற்பட்டவை. அனுபவங்களும் எண்ணங்களும் இயைபுற்று ஒன்றையொன்று நினைவூட்டுகின்றன. மூன்று நிலையில் இவை நிகழ்கின்றன. (1) தொடர்புள்ள செய்திகள் : (எ-டு) வீட்டின் பெயர் அவ்வீட்டில் குடியிருப்போரை நினைவுபடுத்துகின்றது. கத்தி என்றதும் எழுதுகோலைச் சீவுதல் நினைவுக்கு வருகின்றது. (2) ஒப்பான இரண்டு பொருள்கள் : (எ-டு) ஒருவரின் புகைப்படம் அவரை கினைக்கச் செய்கின்றது. இராமன் என்றதும் சீதையை கினைக்கச் செய்கின்றது. இட்டலி என்ற தும் சட்னி நினைவுக்கு வருகின்றது. (3) முரணுன பொருள்கள் : தட்பம் வெப்பத்தையும், நன்மை தீமையையும், கல்வி கல்லாமையை யும், இன்பம் துன்பத்தையும் கினைப்பூட்டலாம். 195 to sur flådssir – dispositions. 10 6 grusi - image. 1 o 7 slåsrață: smugèssir - memory images.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/281&oldid=778108" இலிருந்து மீள்விக்கப்பட்டது