பக்கம்:கல்வி உளவியல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கல்வி உளவியல் இருத்தலுக்குரிய ஏதுக்கள் : கற்றலுக்குச் சாதகமானவை அனைத்தும் இதற்கும் சாதகமானவையே. அவற்றை ஈண்டு நினைவு கூர்க. இருத்துதல்பற்றிய ஒரு சில விதிகளை ஈண்டு எடுத்துரைப் போம். . (1) பல் நிகழ்வு'98 : ஒரு பொருளை மீண்டும் மீண்டும் உரைத்தல் இயைபுகளை இருத்துகின்றது. (எ-டு) வாய்ப்பாடு சிறுவர்களால் மீண்டும் மீண்டும் கற்கப் பெறுகின்றது. (2) கால அண்மைக98 : நேற்று விருந்தில் உண்ட பொருள்கள் நினைவுக்கு வருகின்றன; சென்ற திங்கள் விருந்தில் உண்டவை நினைவுக்கு வருவதில்லை. அண்மையில் நேர்ந்த துலங்கலின் சுவடு ஆழ்ந்திருக்கின்றது. அடிக்கடி பழைய பாடங்களைத் திரும்பவும் படிக்கச் செய்தல் பயன் தரும். (3) முதன்மை'அல்லது 'புதுமை : முதலில் உண்டாகும் அபிப்பிராயம் மாருது என்பதை அனைவரும் அறிவர். முதற் சந்திப்பு அல்லது முதற்பார்வை நல்ல பதிவுகளை உண்டாக்கும்; நீண்ட காலம் நீடிக்கவும் செய்யும். அங்ங்னவே புதுப் பொருளும் கவனத்தை ஈர்க்கும். (4) தெளிவு- : தெளிவு என்பது புலன் உணர்ச்சியின் உறைப்பே. தெளிவு கூரிய கவனத்தை உண்டாக்குகின்றது. கவனம் பெற்றது இருத்தப் பெறுகின்றது. (எ-டு) சூடுண்ட பூனை அடுப்பங்கரை ஏறுவதில்லை. தெளிவான படம் மீண்டும் மீண்டும் மனத்தில் எழு கின்றது. தெளிவாக விளக்கம் செய்யும் ஆசிரியர் சொன்னவை இன் னும் நினைவுக்கு வருகின்றன அன்றே? பொருள் விளக்கத்துடன் கற்கப் பெற்றவை நிலைத்து கிற்கும். (5) எண்ணத் தொடர்பு : இதைப் பற்றி மேலே கூறியுள் ளோம். (6) மன நிறைவு : ஒரு செயலில் நல்ல தேர்ச்சி பெற்ருல் மன நிறைவு அடைகின்ருேம். இதல்ை மேலும் கற்றல் எளிதாகின்றது. கற்பவை மனத்தில் நன்கு படிகின்றன. இயக்கக் கற்றலில் இவ்வுண் மையை நன்கு அறியலாம். (7) மகிழ்ச்சி: மனத்தில் இருத்த இதுவும் ஒரு காரணம் ஆகும். ஒரு பொருள் தோன்றி இன்ப நிலையை எய்துவித்தால் அதனை மீட்டும் 7 Tiosus staġs-frequency. soosirs sairsolo-recency. Hogseressprimacy. 111 ugløto - novelty. ii.20; afts -vividness.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/282&oldid=778111" இலிருந்து மீள்விக்கப்பட்டது