பக்கம்:கல்வி உளவியல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூல்க்கூறுகள் 261 நினைத்தறிதல் எளிதாகும். (எ.டு) வெற்றிகளை நினைவில் வைத்துக் கொண்டு இடர்களை மறந்து விடுகின் ருேம். வெற்றியைப் போல் வெற்றி தருவது வேறென்றும் இல்லை.” (8) கவர்ச்சி : கவர்ச்சியுடைய பொருள் மனத்தில் கிலத்திருக் கின்றது; மற்றவை மறந்து போகின்றன. மாளுக்கர்கள் புத்தகத்தில் படித்தவற்றை மறக்கின்றனர்; படக்காட்சியில் கண்டவற்றை நினைவில் வைத்திருக்கின்றனர். இருத்துதலைப் பயிற்சியால் மேம்பாடு' அடையச் செய்ய முடியாது என்று உளவியலார் கருதுகின்றனர்; அது பிறவியிலேயே அமைந்த கூறு என்பது அவர்கள் கருத்து. - நினைவு கூர்தல்: இது மீண்டும் வருவித்தல் என்றும் வழங்கப் பெறும். நினைவு கூர்தலும்*** மீட்டறிதலும்***நினைவில் வைத்தலின்கல் இரண்டு முக்கிய வழிகளாகும். கினைவு கூர்தல் என்பது பொருள் புலன் களுக்கு முன் இல்லாதபொழுது கினைவில் வைத்தல்; மீட்டறிதல் என்பது பொருள் புலன்களுக்கு முன் இருக்கும்பொழுது நினைவில் வைத்தல். ஒருவர் நம் முன் நிற்கின்ருர்: நாம் அவர் முகத்தை மீட்டறிந்து அவரது பெயரை நினைவுகூர்கின்ருேம். ஒருவரது பெயர் கூறப்பெறுகின்றது; காம் அவரது பெயரை மீட்டறிந்து அவர் முகத்தை நினைவு கூர்கின்ருேம். கடந்த அனுபவங்களை மீட்டும் நினைவுக்குக் கொண்டு வருதலே நினைவு கூர்தல் என்பது. நினைவுகூர்வதற்குச் சில யுக்தி, முறைகளை மேற்கொள்வதுண்டு. கவிஞர்கள் ஒரு செய்யுளின் ஈற்றெழுத்து, ஈற்றசை அல்லது ஈற்றுச் சீரை முறையே அடுத்த செய்யுளின் முதல் எழுத்து, முதல் அசை அல்லது முதற் சீராக வருமாறு தொடர்ந்து செய்யுட்களை அந்தாதித் தொடையாக அமைத்துப் பாடும் முறையை மேற்கொள்ளுகின்றனர். இதளுல் படிப்பவர்கள் பாடல்களை எளிதாக நினைவுக்குக் கொணர முடிகின்றது. ஒரு பாட்டின் நான்கு அடிகளிலுள்ள எதுகைகளும் பாட்டை நினைவுக்குக் கொணரத் துணைசெய்கின்றன. பாடல்களை நினைவு படுத்திக் கொள்வதற்கு நாலாயிரப் திவ்யப் பிரபந்தத்தில் அடிவரவு ' என்ற முறை கையாளப் பெற்றிருக்கின்றது. (எ-டு) திருப்பாவை முப்பது பாசுரங்களின் அடிவரவு பின்வருமாறு: ': மார்கழி வையம் ஒங் காழி மாயன் புள்ளு கீசு கீழ்வானம் தூமணி நோற்று கற்றுக் கனைத்து 11 squiburg - improvement. 11.33%rs கூர்தல்- recall. 1.15 $l. 1-olgáà - recognition. 116 floorsåso coasăşsö - remembering.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/283&oldid=778112" இலிருந்து மீள்விக்கப்பட்டது