பக்கம்:கல்வி உளவியல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 265 Qum (156iri 23 ஒருபொருள் புலன்களின் முன் தோன்றுவதைப் புலன் காட்சி என் கின்ருேம். ஒருநாள் சென்னைக்குச் செல்வதற்காகக் காரைக்குடிப் புகைவண்டி கிலேயத்தில் காத்திருக்கின்றேன். அன்று மெயில் தாமத மாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. நான் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து யாரோ ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கின்றேன். ஒலி ஒன்று கேட்கின்றது. அதை நான் வண்டி வருவதற்கு அறிவிக்கும் மணி யொலி என்று ஊகிக்கின்றேன். எனக்குக் கிடைத்தது வெறும் ஒலி ; ஆனல், முன்னேய அனுபவத்தில் இவ்வொலி வண்டி வருவதற்கு அறிவிக்கும் மணியொலியுடன் தொடர்பு பெற்றிருப்பதால், நான் அந்த மணியைப் பார்க்காவிடினும், அதை வண்டி வருவதற்கு அறிவிக்கும் மணி என்றே நினைக்கின்றேன். இதுதான் ஒலியின் பொருள் அல்லது கருத்து. இத்தகைய பொருள் எங்ங்ணம் ஏற்படுகின்றது ? கனவில் தோன்றும் பல புலப்பண்புகளின் சேர்க்கையால் கருத்தின் (பொருளின்) பலபகுதி கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கட்புலனுல் இளஞ்சிவப்பு’** நிறமும் அழகான உருவமும், ஊற்றுப் புலனல்" மென்மையும், மு.கருத லால் நறுமணமும் இவைபோன்ற பிறவும் சேர்ந்து கிடைப்பது ரோசாப் பூவின் புலன் காட்சியாகும். இக் கருத்து, ஒரளவு பழைய அனுபவங் கள் மீண்டும் தற்போதைய புலப்பண்புகளுடன் கலப்பதால் உண்டா கின்றது. ஒவ்வொரு பொருளும் பற்பல பண்புகளின் ஒருமைப்பாடாகும். அவற்றில் மற்றவற்றைவிடச் சில கவர்ச்சியுடையனவாயும், கிலேயான வையாகவும் இருக்கும். இவற்றை அப்பொருளின் இன்றியமையாப் பகுதிகளாகவும், பிறவற்றைப் பொருள் தோற்றங்களாகவும் கருதுகின் ருேம். உளவியல் முறைப்படி இப்பண்புகளில் ஒன்று கனவில் தோன்றி மற்றவற்றைக் குறிப்பதால் அது பொருள் பெற்றதாகச் சொல்லப் பெறுகின்றது. ஒரு மொழியிலுள்ள சொற்கள் யாவும் பொருள்களைக் குறிக்கும் குறியீடுகளே. குறியீடுகளாகிய சொற்களின் கருத்து அணு பவத்தைப் பொறுத்தது. ஏற்கனவே நாய், மாம்பழம்', 'கிச்சிலிப்பழம்' இவற்றின் பொருள் எப்படி ஏற்படுகின்றது என்பதை விளக்கியுள்ளோம். ஒரே சொல்லின் கருத்து ஆளுக்கு ஆள் மாறும் என்பதையும் உய்த் hasglurgir - meaning. Haagerė; statừų - pink. ***zarpgử qenë - tactual sensation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/287&oldid=778118" இலிருந்து மீள்விக்கப்பட்டது