பக்கம்:கல்வி உளவியல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கல்வி உளவியல் துணர வேண்டும். ஊர்காவலன்' என்பதன் கருத்து நமக்கு ஒன்று; திருடனுக்கு வேறென்று; அதிகாரிகளுக்குப் பிறிதொன்று. சொற்களின் பொருள் இடத்திற்கேற்றவாறு மாறும். (எ-டு) மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் தேர்தலில் 60 விழுக்காடு மக்கள் வாக்களித்தனர். என்ற சொற்ருெடர்களில் மக்கள் என்ற பொருளை அறிக. பொருள் அனுபவத்தைப் பொறுத்திருப்பதால் சரியான பொருள் குழந்தையிடம் அமைய வேண்டுமானல் அது பல்வேறு பொருள்களைப் பல்வேறு அனுபவங்கள் மூலம் அறிய வாய்ப்புத் தருதல் வேண்டும். பள்ளிகளில் அடிக்கடி சிறு தொலைப்பயணம் மகிழ்ச்சிச் செலவு போன்றவற்ருலும், கற்பித்தலில் நவீன முறைகளைக் கையாளுவதாலும் குழந்தைகளிடம் அனுபவங்களைப் பெருக்கலாம். பொதுமைப்படுத்துதல்' குழந்தைகள் பொருள்களின் பொதுத்தன்மையை அறியச் செய்வது கல்வியின் நோக்கங்களில் ஒன்ருகும். பொதுக் கருத்தின் தன்மை யாது? பொதுமை காணும் முறை எவ்வாறு நிகழ்கின்றது? சிந்தனையிலும் பிறருடன் உரையாடும்பொழுதும் தனிப்பட்ட பொருள்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மட்டிலும் கையாண்டால் அம்முறை கட்டுக்கடங்காது நீளும். ஆகையால், மனித அனுபவத்தை வகுத்து ஒரு சொல் குறி யீட்டுத் தொகுதிக்குப் பதிலாக ஒரே சொல்லை வழங்குதல் நமக்குப் பயன் தருவதாகும். கல்வி' என்ற ஒரே சொல்லில் எத்தனையோ கருத்துக்கள் அடங்கியிருத்தல் கவனித்தற்பாலது. நம்முடைய அனு பவங்களை யெல்லாம் ஒழுங்குபடுத்தி சுருக்கினுல்தான் அவை விழுப் பொருள் பயக்கும். பொருளுக்கு முந்தியது அனுபவம் என்பதை நாம் அறிவோம். ஆயினும், அனுபவத்தின் வெற்றுத் தொகுதிகளால் யாதொரு பயனும் இல்லை. அனுபவங்களைத் தொடர்புபடுத்தி அமைப்பதே சிறந்ததாகும். இதன் பயனக ஒரு பொருளை முதலில் கண்ட கிலே தவிர வேறு அமைப்புக்களிலும் காண முடிகின்றது. எடுத்துக்காட்டாக பொதுமை யின் வன்மையால் புதிதாகப் பார்க்கும் பிராணி யொன்றினைக் குதிரை’ என்று உணர்கின்ருேம். எண் உணர்வினைக் கொண்டு இதைப் பின்னும் விளக்குவோம். ஒரு குழந்தை தன் இரண்டாம் வயதில் முழுது ****irit &mdigo or - policeman. 127 சிறு தொலைப் பயணம் - field trips. ***Quir šisplaŭ u@#$sò - generalisation

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/288&oldid=778120" இலிருந்து மீள்விக்கப்பட்டது