பக்கம்:கல்வி உளவியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கல்வி உளவியல் கம்மோடும் உலகத்துடனும் நாம் ஒட்ட ஒழுகுவதற்குரிய"வழிவகைகளை உளவியல் மூலம் அறிந்து கொள்ளலாம். மற்றவர்களைச் சரியாக உணர்ந்து கொள்ள உதவுதல்: இவ்வுலகில் காம் பிறருடன் இசைந்து வாழவேண்டுமாயின், அவர்களுடைய எண்ணங் கள், உணர்ச்சிகள், செயல்கள் முதலியவற்றிற்குரிய காரணங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். மாளுக்கர்களில் சிலர் அதிகம் உழைக்கா டிலேயே குறைந்த முயற்சியால் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும், வேறு சிலர் எவ்வளவு வருந்தி உழைத்தரிலும் தேர்ச்சி யடையாமல் இருப் பதற்கும் காரணம் என்ன ? இவ்வளவு வேற்றுமை ஏன் காணப்படுகின் தது? உலகிலுள்ள பல்வேறு மக்களிடையே காணப்பெறும் பல்வேறுபட்ட அனுபவங்கள், கருத்துக்கள், உணர்ச்சிகள் முதலியவற்றிற்குக் காரணம் பாது? அவர்களது பிறப்பிலேயே இவ்வேற்றுமைகள் அமைந்திருந்தனவா? அல்லது அவர்கள் வாழும் சூழ்நிலை காரணமாக அவை ஏற்பட்டனவா? சமூகத்திலுள்ள மனிதர்களின் நடத்தை பல்வேறு விதமாகக் காணப் பெறுவதற்குக் காரணம் என்ன? என்பனபோன்ற விளுக்களுக்கு விடை கான உணவியல் துணைசெய்கின்றது. இச் சிறுநூலில் அனைத்தையும் விளக்க இயலாது. உளவியல் அறிவு ஏற்பட்ட பிறகு முக்களின் சிந்தை, உணர்ச்சி, சொல், செயல் முதலியவற்றைப்பற்றி கம்க்கு உண்டாகும் கருத்திற்கும் அதற்கு முன்னிருந்த கருத்திற்கும் அதிக வேற்றுமை உண்டு. அவற்றைக் கண்டு நாம் அவ்வளவு அதிகமாக மயங்குவ தில்லை என்பது வெளிப்படை. அறிவின் பொருட்டே அனைத்தையும் அறிதல் : மனிதன் அறி வுள்ளவன். பயனுக்காகச் சிலர் செய்திகளை அறியினும் அறிவுக்காகவும் செய்திகளை அறியும் அவாவுள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அறிவுத் தினவினப் போக்கிக் கொள்ள அவ்வாறு செய்கின்றனர். எப்பொழுதாவது இவை பயன்படும் என்ற நம்பிக்கையால் தம்முடைய கடத்தையையும் பிறருடைய நடத்தையையும் கூர்ந்து ஆராய்கின்றனர்: தனியாட்கள் எவ்வாறு சூழ்நிலைக் கேற்பத் துலக்க முறுகின்றனர் என் பதைத் தெளிவாக அறிதல்வேண்டும் என்று அறிவியல் உளவியலறிஞன் விழைகின்ருன். எவ்வாறு கம் கெரீள்வாய்களும் மூளைகளும் நாம் காணும் உலகத்தையும் காணு உலகத்தையும் அறிந்து கொள்கின்றன என்றும், எவ்வாறு நம் அனுபவங்களை நம்மிடம் இருத்திவைத்து அறி வாராய்ச்சியிலும் கற்பனையிலும் பயன்படுத்துகின்ருேம் என்றும் தெரிந்து கொள்ள விரும்புகின்றன். இவ்வுலகில் சிலர் பொருள் திரட்டுவதிலும்

    • Gonorairii - receptor.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/29&oldid=778125" இலிருந்து மீள்விக்கப்பட்டது