பக்கம்:கல்வி உளவியல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 269 மகிழ்க. பிறரை ஐயுறுதல், இரு பொருள்படப் பேசுதல், புறங்கூறுதல், வந்த கடிதங்கட்கு உடனே பதில் எழுதுதல் போன்றவை யாவும்: பழக்கங்களே. பழக்கம் அமைதலால் ஏற்படும் நடைமுறைப் பயன்கள் : பழக்கச் செயல்களுக்கு முயற்சி தேவையில்லை. இத்கைய செயல்களுக்கு அளிக்கப்பெறும் கனவுக் கவனம் மிகக் குறைவு. உடல் வளைந்துபடிக்கும். பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவனும் படிப்பதில் எவ்வித முறையான பழக்கம் இல்லாதவனும் தேர்வுக்காலத்தில் படிப்பதை உற்று நோக்கிளுல் இவ் வுண்மை விளங்கும். குழந்தை எழுதக் கற்றல் மிகவும் துன்பம் பயப்பது. அஃது ஒவ்வொரு எழுத்தின் அமைப்பையும் கவனிக்க வேண்டும் ; ஒவ்வொரு சொற்களையும் எழுத்துக் கூட்டவேண்டும். இவற்றை எண்ணற்ற தடவைகள் செய்ய வேண்டும். தன்னுடைய முழுக்கவனத்தையும் எழுதும் செயலின் ஒவ்வொரு பகுதியிலும் செலுத்த வேண்டும். ஆனால், ஆசிரியர் ஒரு வாக்கியத்தைக் கரும் பலகையில் எவ்வளவு எளிதாக எழுதுகின்ருர்! பழக்கத்தின் வன்மையால் முதியோரின் எழுதும் செயல் தாகை நடைபெறுகின்றது. பழக்கம் என்பது ஆற்றல் அழியாவிசை அதல்ை உள ஆற்றலும் உடல் ஆற்றலும் சிக்கனமாகச் செலவழிகின்றன. நடைமுறையில் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் வருமாறு: (1) களப்பைக் குறைத்தல்: பழக்கம் களப்பைக் குறைக் கின்றது. ஒரு விளையாட்டை முதன்முதலில் விளையாடும்போது அதிகக் களப்படைகின்ருேம். முதன்முதலாகச் சீறியாழ் இயக்கக் கற்றதனையும். முதன் முதலாகத் தட்டச்சுப் பொறியின இயக்கக் கற்றதனையும் நினைவு கூர்க. . இரண்டிலும் விரல்கள் கோவெடுத்ததையும் கண்டீர்களன்ருே நாளடைவில் அவை வேலைகள் செய்வதை நாம் உணர்வதே இல்லை. (2) இயக்கங்களை எளிதாக்குதல் பழக்கம் இயக்கங்களைத் திட்டமாக்குகின்றது; தவறுகளைப் போக்குகின்றது. முதன்முதலில் மிதி வண்டியில் ஏற முயன்ற நாளே நினைவு கூர்க. முதன்முதலில் செய்யப். பெற்ற தவருண இயக்கங்களையும், நன்ருகப் பழகினபிறகு மேற்கொள் 1ளும் இயக்கங்களையும் ஒப்பிட்டு உணர்க. (3) செயல்கள் திட்டம் பெறுதல் தட்டச்சுப் பொறியினையும் ஹார்மோனியத்தையும் இயக்குபவர் எவ்வளவு நயமாகச் சாவிகளை இயக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/291&oldid=778129" இலிருந்து மீள்விக்கப்பட்டது