பக்கம்:கல்வி உளவியல்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 271 முதலாவதாக : கற்பழக்கங்களை @ສrຫມທoມ வளர்க்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? சிறிய குழந்தை எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளுகின்றது. இரண்டாவதாக: பழக்கங்கள் உண்டாக வேண்டுமாயின் செயல் களைத் திரும்பத் திரும்ப இயற்ற வேண்டும். ஒரு முறையில் சிந்தித் தலும் செயலாற்றுதலும், மீண்டும் வாய்ப்புக்கள் நேரிடுங்கால் இம் முறையை வலியுறுத்தும். தார்ன் டைக் என்பார் கூறிய 'பயிற்சி விதி"யை இவண் நினைவு கூர்தல் சாலப் பயனுடைத்தாம். நீந்துதலால் நீச்சத்தை யும், ஓடுதலால் ஓட்டத்தையும், எழுதுதலால் எழுத்தையும் கற்கின்ருேம் என்பதை நாம் நன்கு அறிவோம். பழக்கத்திற்குக் குறுக்கு வழிகள் இல்லை. மூன்ருவதாக பயன்படும் முறையிலேயே பழக்கங்களை அமைக்க வேண்டும். (எ-டு). எழுத்துக் கூட்டலைக் கற்பதற்கு ஒரு குழந்தையைப் பலமுறை ஒரு சொல்லின் எழுத்தைக் கூட்டிப் படிக்கச் செய்வதால் பயன் இல்லை. சரியாக எழுத்துக் கூட்டல், எழுதும்பொழுதே வேண்டப் பெறுவது ; ஆகவே, எழுதுவதால்தான் அப் பழக்கத்தை வற்புறுத்த வேண்டும். வாய்மொழிப் பயிற்சியாலோ படிப்பதாலோ எழுத்துக் கூட்டல் பழக்கத்தை ஏற்படுத்த முடியாது. நான்காவதாக: பழக்கம் அமையத் தொடங்கும்பொழுது ஒரு வன்மையான உள்ளக்கிளர்ச்சித் தூண்டல் இன்றியமையாதது. உணர்ச்சிகளுக்குத் செய்யும் முறையீடே* ஆய்தலுக்குச் செய்யும் முறையீட்டைவிட வன்மை வாய்ந்தது. இதல்ைதான் மெய்ப் பொருளறிஞரைவிட மேடைப் பேச்சாளர் பொதுமக்களின் மனத்தை எளிதில் கவர்கின்ருர், உள்ளக் கிளர்ச்சியால் தொடங்கிய வினையை மீண்டும் மீண்டும் உள்ளக்கிளர்ச்சியைக் கொண்டே நிலைநிறுத்த வேண்டும். ஐந்தாவதாக : ஒரு புதிய பழக்கத்தை உண்டாக்கும்பொழுது விதிவிலக்கு ஒன்றையும் அனுமதிக்கக் கூடாது. செயலே இடை யீடின்றி விடாப்பிடியாக இயற்ற வேண்டும். ஒரு முறை தவறில்ை நீண்ட பயிற்சியின் பயனை இழக்க நேரிடும். விருந்திலோ பிற இடங் களிலோ பலர் இன்று மட்டிலும் புகைப்பிடித்தலையும் குடித்தலையும் மேற் கொள்வோம் என்று அவற்றைச் செய்து கெட்டனர். 188முறையீடு - appeal.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/293&oldid=778133" இலிருந்து மீள்விக்கப்பட்டது