பக்கம்:கல்வி உளவியல்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கல்வி உளவியல் ஆருவதாக புதிய துணிவை நிறைவேற்றுவதற்கு முதல் துணிவைப் பயன்படுத்த வேண்டும். பல முறையான கற்றுணிவுகளை விட ஒரு நற்செயல் சிறந்ததாகும். ஏழாவதாக! பழகவேண்டிய தொழிலை முதலிலேயே நுணுக்க மாகக் கவனித்துப் பழகவேண்டும். இதைச் செய்யாவிடில், கெட்ட துலக்கங்கள் படிந்துவிடும். பிறகு அவற்றை அகற்றுவது கடினம். (எ.டு) குழந்தைகளுக்கு எழுதுகோலே எங்ங்னம்,எவ்விடத்தில், பிடிக்கவேண்டும் என்பதைத் தொடக்கத்திலேயே கற்பிக்க வேண்டும். எழுதும்போது சொற்களுக்கும் வரிகளுக்கும் இடையே இடம்விட்டு எழுதவும், படிக்கும் போது நிறுத்திப் படிக்கவும் பழக்க வேண்டும். ர, ற, ல, ள, ழ இவற் றின் வேற்றுமைகளை நன்கு பழக்கவேண்டும். எட்டாவதாக குழந்தைகளிடம் ஏற்படும் நற்பழக்கங்களுக்கு உடனே பலன் கிடைக்கச் செய்தல் வேண்டும். 'கற்பழக்கங்களுக்கு பரிசில நல்கு, தீய பழக்கங்களுக்குத் தண்டனை வழங்கு' என்பது தார்ன் டைக் என்பார் கூறும் அறவுரை. ஆசிரியர் மிக விழிப்புடன் இதனைக் கையாள வேண்டும். ஆறுதலும் இன்பமும் பயக்கும் நடத்தை வளரும் ; துன்பமும் தண்டனையும் தரும் செயல்கள் தேயும். ஒன்பதாவதாக ஒரு பழக்கம் தொடங்கும்போதே ஆசிரியரின் கண்காணிப்பு வேண்டும். நன்ருகத் தொடங்குதல் பாதியை நிறை வேற்றுவதாகும். விரும்பத்தகாத பழக்கங்களை மாற்றியமைத்தல்: நம்முடைய பழக்கமே நம்முடைய வாழ்க்கை.முழுவதையும் ஆளுகின்றது. எனவே, இளமையிலேயே பல கற்பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் அமைந்திருக்கும் விரும்பத்தகாத பழக்கங்களை முதலில் களைவதே கற்பழக்கம் அமைதலுக்கு வழிகோலுவதாகும். இவை இரண்டு வகைப்படும் : (1) முற்பயிற்சியின்பொழுது சில குறைபாடுகளால் தவருக அமைந்தவை. (எ-டு) சரியாகபடி எழுதும் பழக்கமின்மை போன்றவை. (2) நரம்பு சம்பந்தமான பழக்கங்கள். (எ-டு) நகம் கடித் தல் போன்றவை. . முதல் வகைப் பழக்கங்களைக் களைய வேண்டுமாயின், புதிய பழக் கங்களில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். இதல்ை பழைய பழக்கங்கள் பயிற்சியின்றி மறைந்து போகும். (எ.டு. ஒரு முறை டயில் கையெழுத்துக் கெட்டவர்களுக்கு வேருெரு முறையில் (style) கையெழுத்துப் பழக்கத்தைத் தருவது பயன்தரும். ஒரு பழக்கத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/294&oldid=778135" இலிருந்து மீள்விக்கப்பட்டது