பக்கம்:கல்வி உளவியல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 273 களைய வேண்டுமாயின், அதே நிலையில் பயன்படும் வேறு நற்பழக்கங்களை அமைக்க வேண்டும். (எ-டு; ஆசிரியர் விடுக்கும் வினவுக்கு மாணுக்கன் எழுந்து கின்று பல்வேறு உடலசைவுகளுடனும் புய அசைவுகளுடனும் விடை தரும் பழக்கமுள்ள வகை இருந்தால், அவனை உட்கார்ந்து கொண்டே பதிலளிக்குமாறு பயிற்சி தரலாம். இரண்டாவது வகைப் பழக்கங்களைக் களைதல் கடினம். ஆழ்ந்து படிந்த உள்ளக்கிளர்ச்சியின் காரணமாகப் படிந்திருக்கும் பழக்கத்தைக் களைந்த பிறகு புதிய பழக்கத்தை ஏற்படுத்தலாம். தண்டனையாலோ கடிவதாலோ அவற்றை அகற்ற முடியாது. (எ-டு) நகம்-கடித்தல் ஒரு சிறுமியிடம் பழக்கமாகப் படிந்திருந்தால், அவளைக் கடிதல் கூடாது. அவளைப் பரிவுடன் கவனித்து, அவள் தோற்றத்தில் அக்கறை காட்டி, உரிமையுடன் நகங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். திறன்கள் ஏதாவது ஒன்றினைக் கற்றதின் பயனக எளிதாகச் செய்தலே திறன் :4எனப்படுவது. பெரும்பாலும் கற்கும் செயல்களைக் குறிப்பிடும் பொழுதுதான் திறன்' என்று பேசுகின்ருேம். கையெழுத்து, நூல் நூற்றல், வீணையை மிழற்றுதல், கயிற்றின் மீது கடத்தல், தட்டச்சுப் பொறியினை இயக்குதல் போன்ற செயல்களைப் பேசும்பொழுது திறனை யும் சேர்த்தே குறிப்பிடுகின்ருேம். திறனையடைதலைப்பற்றி அறிய வேண்டுமாயின் மிகச் சிக்கலான கையெழுத்து கற்கும்பொழுது ஏற்படும் பல்வேறு செயல்களைக் கவனித்தால் உண்மை புலகுைம். ஒரு சிறு குழந்தை தன் பெயரை எழுதும்போது கவனிக்க. குழந்தையின் செயலில் உடலும் உள்ளமும் பங்கு பெறுகின்றன; எழுதுகோலை இறுகப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு கோட்டையும் துன்பத்துடன் கூடிய முயற்சியால் அமைக்கின்றது; நாக்கை நீட்டிக் கொண்டும் உடம்பை முறுக்கிக் கொண்டும் தன் உடல் முழுவதையும் இயக்குகின் றது; பெருமூச்சு விடுகின்றது; தன்னுடைய முயற்சியால் களைத்துப் போகின்றது. முதிர்ந்தோர் செயல் வேறு விதமானது; அதை அவர் வெகு இலகுவாகச் செய்கின்றர். நேர்த்தி,* மென்மைக எளிமை ஆகி யவை ஒரு செயலின் நற்பண்புகள் ஆகும். --- 1843; spoir - skill. 1 ss Saif ## - neatness 185 மென்மை - Smoothness. 137 srefl6oup - e a 88 • க.உ.18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/295&oldid=778137" இலிருந்து மீள்விக்கப்பட்டது