பக்கம்:கல்வி உளவியல்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் - 27s பரிவு பரிவு' என்பது ஒத்துணர்ச்சி, அஃதாவது பிறருடைய துன்பத் தில் கலந்து அவர்களுடன் அனுதாபப்படுதலும் அவர்கள் இன் பத்தில் கலந்து மகிழ்தலுமாம். தொடக்கத்தில் இஃது இயல்பூக்கத்தின் அடிப் படையில் அமைந்திருப்பது. இந்த 'ஆதி செயலற்ற பரிவு' தான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பாய்கின்றது; உள்ளக் கிளர்ச்சி கிளப்பப்பெறுங்கால் ஒரு கூட்டத்திலும் பொங்கி வழிவது. சமூக வாழ்க்கைக்கு இது மிகவும் இன்றியமையாதது. அறிவு வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் இது வேண்டப்பெறுவது. நம்முடனுள்ளவர்களின் உணர்ச்சியை நாம் பகிர்ந்து கொள்வதைப்போலவே கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். பரிவுணர்ச்சி இலக்கியங்களைச் சுவைப்பதற்கு மிகவும் வேண்டற்பாலது. மாளுக்கர்களிடம் பரிவுணர்ச்சியை எங்ங்னம் வளர்ப்பதென்பது ஒரு பிரச்சினை. ஆசிரியர் மிகவும் கருத்தாக இதனை மாளுக்கர்களிடம் வளர்க்க வேண்டும். முதல்படியாக ஆசிரியர் மாளுக்கர்களுடன் பரிவுடன் இருக்க வேண்டும். பள்ளிக்கு வெளியிலும் உள்ளும், அவர்கள் செயல்களிலும் பிறவற்றிலும் அக்கறை காட்ட வேண்டும், பள்ளியில் சிறு சிறு விஷயங்களையும் உதாசீனம் செய்தல் ஆகாது. ஆசிரியர் வீட்டிலுள்ள முதிர்ந்தோரைப்பற்றி விசாரித்தல், பள்ளியில் படித்து நீங் கிய மூத்தோர்களைப்பற்றி விசாரித்தல், துன்பப்படுவோரிடம் ஆறுதல் மொழி கூறுதல் போன்ற சிறு நிகழ்ச்சிகளும் மாளுக்கர்களிடம் பெருமாற் றங்களை யுண்டாக்கும். பாடப்பட்டியிலுள்ள பாடங்களைவிட இத் தகைய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. கல்வி ஏற்பாட்டிலுள்ள'பல பாடங்கள் இதற்குப் பல வாய்ப்புக் களை நல்குகின்றன. சரியான முறையில் மட்டிலும் பயிற்றில்ை இலக்கியத்தைப்போல் இதற்குத்துணை செய்யக்கூடிய பாடமே இல்லை யெனலாம். நிலவியல்,***கணிதம், அறிவியல் பாடங்களில் கூட வெறும் செய்திகளையும் விதிகளையும் கற்பிப்பதுடன், மாளுக்கர்களைப் பிறருடைய வாழ்க்கையுடன் கற்பனையில் ஒன்றும் முறையை வளர்க்க லாம். வெளிநாட்டார்கள், அறிவியலாராய்ச்சி நிபுணர்கள், பலவேறு விதங்களில் மக்கள் நலனுக்குச் சேவை புரிந்தோர் இவர்கள் வாழ்க்கை மாளுக்கர்களின் பரிவு வளர்ச்சிக்குத் துணைபுரியலாம். வரலாறு மட்டு 188பரிவு - sympathy, aso“ská - Gausopp ufia” - “primitive passive sympathy”, a 4& sóð shurū’-curriculum 1-1 flossus - geography.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/297&oldid=778141" இலிருந்து மீள்விக்கப்பட்டது