பக்கம்:கல்வி உளவியல்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276. கல்வி உளவியல் மின்றி ஒவ்வொரு பாடத்திலும் மாளுக்கர்கள் தமக்கு முன்னல் வாழ்ந் தவர்கட்கு மிகவும் கடமைப்பட்டவர்கள் என்பதை அவர்கள் உணரச் செய்வது ஆசிரியரின் பொறுப்பாகும். பின்பற்றல் பின்பற்றல்' 'கற்றலில் பெரும்பங்கு பெறுகின்றது. சிறுகுழவி கள் மொழி கற்றலிலும் பிற செயல்களிலும், சற்று வளர்ந்த பிள்ளைகள் சமூகப் பழக்கங்களையும் மனப்பான்மைகளையும் கற்றலிலும் பின்பற்றல் உணர்ச்சி தலையாய பங்கினைப் பெறுகின்றது. எனவே, ஆசிரியர்களும் பெற்ருேர்களும் மாணுக்கர்கட் குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக, முன் மாதிரிகளாகத் திகழவேண்டும். சிறந்த எடுத்துக்காட்டுக்களை அவர்கள் முன் வைக்கவேண்டும். அறநிலைக் கருத்துக்களைச் சிறுவர்கள், பெற்ருேள்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்தே பெறுகின்றனர். மதிப்புணர்ச்சி, சுயநலமின்மை, சேவையுணர்ச்சி, உண்மையொழுக்கம் முதலியவை சிறுவர்களிடம் வளர வேண்டுமானல் முதலில் நம்மிடம் அவை இருத்தல் வேண்டும். நாம் சொல்லுவதைப்போல் செய்ய வேண்டும் என்று குழந்தைகளை எதிர்பார்த்தலால் பயனில்லை ; முதலில் நாம் அவற்றில் கடந்து காட்டவேண்டும். சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.: என்ற குறளின் பொருளைச் சிறுவர்கள் பிறர் சொல்லாமலேயே நன்கு உணர்வர். மனிதர்கள் கற்றலில் பின்பற்றல் தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் பங்குபெற்ற வண்ணமிருக்கின்றது. தங்கட்குத் திருப்தி கிடைக்கும்போ தெல்லாம் மக்களிடம் பின்பற்றல் கிகழ்கின்றது. பலர் நிகழ்த்தும் பலவிதமான செயல்களைக் கற்கவேண்டுமாயின் நாம் முன்பு பழகியுள்ள திறன்களைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். பள்ளி களில் சிறந்த முன்மாதிரிகள் மாளுக்கர்கள்முன் வைக்கப்பெறுதல் வேண்டும். பேரறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் இதற்குப் பெருங் துணை புரியும். "மிகப் பெரிய புதுப்போக்குடைய" அறிஞர்கள்கூட தமக்கு முன்னிருந்த பெரியோர்க்ளைப் பின்பற்றியே அறிஞர்களாயினர்' என்பதை மாளுக்கர்கள் உணரச் செய்தல் வேண்டும். பேரறிஞர் 14:பின்பற்றல் -imitation. 148 குறள் 664. 1.44 புதுப் போக்குடைய . original.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/298&oldid=778143" இலிருந்து மீள்விக்கப்பட்டது