பக்கம்:கல்வி உளவியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 9 சிலர் புகழை நாடி அலைவதிலும் உழல்கின்றனர்; சிலர் பகல்வெயிலில் காய்ந்து உழைத்து அமைதியாகக் காலங்கழிக்கின்றனர்; சிலர் தம் கொள்கைக்காகவும் தம் தலைவனுக்காகவும் மகிழ்வுடன் உயிரையும் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றனர்; சிலர் எதிலும் ஒதுங்கி நிற்கின்ற னர்; சிலர் பிடிவாதமாக உள்ளனர்; சிலர் கோழைகளாக வுள்ளனர். இக் குணங்களில் சிலவோ பலவோ ஒவ்வொருவரிடமும் அமைந்திருக்கின்றன. -இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன என்பதை உளவியல் அறிஞன் ஒரு பயனையும் கருதாது அவற்றிற்கெனவே ஆராய்கின்ருன். உண்மையான, கிச்சயமான, அறிவினை அடையும் வழி மிக நீளமானது; அது கடின மானதுவுமாகும. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் விளக்குவதிலும் துணையாக இருத்தல் : சமூகப் பிரச்சினைகளை அறிவியல்முறையில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு உளவியல்உண்மைகள் பயன்படுகின்றன. இத்துறை இன்று, சமூக உளவியல் என்ற ஒரு தனித் துன்ற்யாகவே வடிவு பெற் றுள்ளது. மனிதன் வழிவழியாகப் படைத்துக்கொண்ட கிலேயங்களே மாற்றமுடியும் என்பது உளவியல் வல்லாரின் நம்பிக்கை. சமூகத்தில் எழும் பல சிக்கலான பிரச்சினைகளையும் உளவியல் முறைப்படிதீர்க்கலாம்; அவை எழாமலும் தவிர்க்கலாம். அண்மையில், உளவியலறிவின் பயன லும் ஆராய்ச்சியாலும், பொருளியல், அரசியல், வரலாறு, சமூகவியல், மனிதவியல் போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு விளக்கமும் தெளி வும் ஏற்பட்டுள்ளன. மனிதனுடைய சமூக நடத்தையையும் உளவியல் விளக்குகின்றது. சமூக நடத்தை என்பது கற்றுக்கொண்ட நடத்தையாகும். ஒவ் வொரு குழந்தையும் சமூகத்தினிடையே பிறந்து, சமூகத்தினிடையே வாழ்வதால் அதனுடைய நடத்தை சமூகத்தினிடம் உண்டாகும் பலவித மான மாறுதல்களால் அமைகின்றது. குடிவழி' முறையில் கிடைக் கும் ஆற்றல்களும் சமூக வாழ்வின் பயனுல் பலவிதமான மாறுதல்களை அடைகின்றன. மனிதன் பிறந்ததும் ஒரு குழுவின் உறுப்பினன் ஆகின்ருன். அவ னுக்கு அதிக நெருக்கமான குழுவாக இருப்பது குடும்பம் ஆகும். அவன் பிறந்த குடும்பமும் அதனுடன் தொடர்புற்ற பிற குடும்பங்களும் சேர்ந்து அவனுடைய சூழ்நிலையாக அமைகின்றன. அதன் பிறகு குடும்பம் சாதி யாகவும், சாதி சமுதாயமாகவும் அச் சூழ்நிலை விரிவடைகின்றது.இவ்வாறு o2 Siç sufl-heredity. ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/30&oldid=778148" இலிருந்து மீள்விக்கப்பட்டது