பக்கம்:கல்வி உளவியல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கல்வி உளவியல் னும் சோர்வுற்ற சமயம் பார்த்து அப்பொருள் நம் இல்லத்துக்குள்ளும் நுழைந்து விடுகின்றது. மறுநாள் நண்பர்களிடமும் அதைப்போல் சிறந் தது இல்லை என்று புகழ்ந்து பேசத் தொடங்கி விடுகின்ருேம். கட்சிப் பிரசாரத்தில் கருத்தேற்றத்தைத் திறமையாகக் கையாளுகின்றனர்; சமய மாற்றத்திலும் அப்படியே. கற்றலில் இதன் பயன் : ஆசிரியர் என்பவர் சிறந்த ஒழுக்கசீலர் ; நிறைந்த அறிவுடையவர். எனவே, அவர் தீமை பயப்பவைகளே மாளுக்கர்களிடம் கருத்தேற்றம் செய்யார். சமூகம் அவரைப் பொறுப் பான நிலையில் வைத்திருக்கின்றது. தன்னுடைய சமயக்கருத்தினையோ அரசியல் கருத்தினையோ ஆசிரியர் மாணுக்கர்களிடம் கூறுதல் கூடாது. அவர்கள் மாணுக்கர்களிடம் உண்மை காணும் திறனயும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்; மானிட இனம் இதுகாறும் கண்டுள்ள சிறந்த அனுபவத்தையும், உயர்ந்த குறிக்கோள்களையும் அவர்கள் முன் வைக்க வேண்டும். வளர்ந்துவரும் சிறுவர் சமுதாயம், அவற்றிலிருந்து தத்தமக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். விளையாட்டு விளையாட்டு முறையில் கற்பித்தலையும் விளையாட்டைப்பற்றி உள வியலார் கூறும் கொள்கைகளையும் ஐந்தாம் அத்தியாயத்தில் கூறினுேம், சிறுவர்கள் இயல்பாகவே விளையாடும் தன்மையுடையவர்கள்; இச்செயல் அவர்களிடம் தானகவே தோன்றுகின்றது; அதன் பொருட்டே சிறுவர் கள் விளையாட்டில் ஈடுபட்டுத் துய்க்கின்றனர். விளையாட்டு சிறுவர் களிடம் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, புலப்பயிற்சி, கற்பனையாற்றல் போன்ற பண்புகளை வளர்க்கின்றது. இவை யாவும் கற்றலுக்குத் துணை செய்யும் கூறுகளன்ருே : பயிற்சி மாற்றம் கல்வித்துறையில் கொள்கை முறையிலும் செயல் முறையிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று பயிற்சி மாற்றம்' என்பது. ஒரு பாடத்தில் அல்லது செயலில் கொடுக்கப்பெறும் பயிற்சி பிறபாடங் களிலும் செயல்களிலும் பயன்படுகின்றதா? எந்த அளவுக்குப் பயன்படு கின்றது: அஃது எந்த நிபந்தனைகளுக்குட்பட்டது? ஒன்றைக்கற்பது இன்னென்றைக் கற்பதன்மேல் ஆதிக்கமுள்ளதா? என்னும் விை இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினையாகும். 1 ** ui&þá Lom þpío - transfer of training.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/300&oldid=778150" இலிருந்து மீள்விக்கப்பட்டது