பக்கம்:கல்வி உளவியல்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 279 ஒரு மொழியிலுள்ள சொற்களையும் வரலாறுபற்றிய செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கணித வாய்ப்பாடுகளையும் மனப்பாடம் செய்தல் நினை வாற்றலுக்குப் பயிற்சி தந்து ஏனைய செய்திகளைத் திறம்பட நினைவிற்குக் கொண்டுவரத் துணை செய்யும் என்று நம்பினர். இன்றும் சிலர் நம்பு கின்றனர். அங்ங்னமே, வேறு சிலர் அறிவியல் முறைகளில் பயிற்றல் உற்றுநோக்கும் ஆற்றலைப் பயிற்றுவித்து சமூகத் தொடர்புகளையும் தனிப்பட்டவரின் தொடர்புகளையுங்கூட ஊன்றிக் கவனிக்கச் செய்யும் என வாதிப்பர். ஒரு திறனில் கொடுக்கப்பெறும் பயிற்சி வேறு திற னுக்குப் பெயர்ச்சி அடைகின்றது'என்பது இதன் உட்பொருள். இதுதான் பயிற்சி மாற்றம் அல்லது முறைமைக் கட்டுப்பாடு* என்று வழங்கப் பெறுகின்றது. பழைய உளவியலார் உள்ளம் என்பது நினைவு, கற்பனை, உற்றுநோக்கல், சிந்தனை, ஆய்தல் போன்ற ஒன்றற்கொன்று தொடர் பில்லாத தனித்தனிப் பெற்றிகளாலான சிற்றறைகளைக் கொண்டது என்றும், தக்க பயிற்சிகளால் அவற்றை வலுப்படுத்தி எந்தச் செயலுக்கும் பயன்படுத்தக்கூடும் என்றும் கருதினர். இக்கருத்து பெற்றி உளவிய லின்-போற்பட்டது. இலத்தீன் மொழி, கணிதம், அளவைநூல்' போன்றவை பிற பாடங்களைவிட உயர்ந்த பயிற்சி மதிப்புடையவை எனக் கருதப்பெற்றன. இப்பாடங்களில் தேர்ச்சி அதிகமாகக் காண்பிப் போர் வாழ்க்கையின் பல துறைகளில் சிறப்பாகத் திகழ்வர் எனக் கருதப் பெற்றது. மேற்கூறிய பிரச்சினை பள்ளி வேலையைப் பெரிதும் பாதிக்கின்றது. இக் கொள்கையின்படி பயிற்றல் மதிப்புடைய பாடங்களே பள்ளிகளில் கற்பிக்கப்பெறுதல் வேண்டும்; இடம் பெறுதலும் வேண்டும். உடலுக்குப் பயிற்சி தருவதுபோல உள்ளத்திற்கும் பயிற்சி தரும் முறையில் இவற்றைக் கற்பிக்க வேண்டும். இக் கொள்கையில் இரண்டு பிழை யான வாதங்கள்***உள்ளன: ஒன்று, உள்ளத்தின் பெற்றிபற்றிய கொள்கை, இரண்டு, தசைவளர்ச்சியைப்போல் உளச்செயலும் வளர்ச்சி பெறல் என்ற கருத்து. இன்றைய உளவியல் பெற்றி உளவியலை ஒப்புக் கொள்வதில்லை. சிந்தனை, நினைவு, உற்று நோக்கல் போன்றவை தனித் தனி பெற்றிகளாக இருப்பின், பயிற்சி மாற்றம் ஏற்படுவதெங்ங்ணம்? இதுபற்றிய வாத, எதிர்வாதங்களை உளநூல்களில் கண்டு தெளிக. • 4 8 qpsopanưả sử 9ủurG - formal discipline. *** Quppé - faculty. **o Quñso a sirouš - faculty psychology. ****sarona of a -logic. 152 பிழையான வாதம் - fallacy.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/301&oldid=778153" இலிருந்து மீள்விக்கப்பட்டது