பக்கம்:கல்வி உளவியல்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கல்வி உளவியல் பயிற்சி மாற்ற அளவு : சில நிபந்தனைகளின் கீழ் ஓரளவு பயிற்சி மாற்றம் இருக்கத்தான் செய்கின்றது ஒருகால் கணித அடிப்படைச் சிங் தன, வரலாற்று அடிப்படைச் சிந்தனைக்குத் துணையாகாமற் போகலாம்: ஆளுல், அஃது அறிவியல் அடிப்படைச் சிந்தனைக்கு நிச்சயம் ஓரளவு துணை புரியத்தான் செய்கின்றது. ஒரு பாடத்தில் மேற்கொள்ளப்பெறும் முறைகள் இன்னொரு பாடத்திற்கு மேற்கொள்ளப்பெற்ருல் ஓரளவு பயிற்சி மாற்றம் இருக்கும். எனவே, அறிவியல் ஆராய்ச்சி முறைகள், சான்றுகளே மதிப்பிடல், முடிவுகளைச் சோதித்தல் போன்றவை வரலாற்று ஆராய்ச்சியில் பயன்படலாம். இதற்கு மாளுக்கர்கள் அம் முறைகளை நன்கு புரிந்து கொண்டிருக்கவேண்டும்; அவற்றின் உட்பொருளை அறிந்து கொண்டிருக்கவும் வேண்டும். இயக்கக் கற்றலாயினும் சரி, சொல்முறைக் கற்றலாயினும் சரி இம் மாற்றம் (1) பொருள்களொப்புமையாலும், (2) யுக்தி முறை*** களொப்புமையாலும், (3) விதி*களொப்புமையாலும், அல்லது (4) இவற்றின் தொகுதியாலும் ஏற்படுகின்றது என்று கண்டறிந்துள் ளனர். அண்மைக்காலத்தில் எந்த அளவுக்குப் பயிற்சி மாற்றம் ஏற்படு கின்றது என்பதை அறியப் பல சோதனைகள் மேற்கொள்ளப்பெற்றுள் ளன. ஒரு சோதனையை இவண் கூறுவோம். சோதனை : கூடிய வரையில் சமமான இரண்டு குழுக்கள் ஒரே வகுப்பிலிருந்து பொருக்கி எடுக்கப்பெற்றனர். ஒரு குழுவிலுள்ள ஒவ்வொருவரும் வயது, பால், இனம், பயிற்சி, அறிதிறன், சோதனை செய்யப்போகும் திறன் ஆகியவற்றில் ஒத்துள்ள மற்றெரு குழுவின் ஒவ்வொருவருடனும் பொருத்தப்பெற்றனர். ஒரு குறிப்பிட்ட திறன் முதலில் சோதிக்கப்பெற்றது; அதில் பயிற்சி அளித்து மீட்டும் அத்திறன் சோதிக்கப் பெற்றது. அடுத்த கட்டுப்பாட்டுக்குழு’விற்குப் பயிற்சி அளிக்கப்பெறவில்லை. ஆனல், அக்குழு இறுதிச் சோதனைக் குட்படுத்தப்பெற்றது. வெற்றசைகளின் நினைவுத்திறனிலிருந்து எண், எழுத்துக்கள், அல்லது சொற்களின் கினைவுத்திறனுக்கு ஏதாவது மாற்றம் ஏற்படுகின்றதா என்றும், பரப்பு, எடைகள் பற்றிய துணிவு:7 மிகவிரிந்த அவற்றின் அளவுகளில் பயன்படுகின்றதா என்றும் ஒளி உறைப்புகளிலிருந்து’**ஒலி உறைப்புக்களுக்கு மாற்றம் ஏற்படுகின்றதா * * * oustoid - similarity. i. 54 usáš (opsop – technique. is 5 விதி. principle. * * * @softpos - nonsense syllable. is a gafia - judgment. 1 5 8 o-sopůų - intensity.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/302&oldid=778154" இலிருந்து மீள்விக்கப்பட்டது