பக்கம்:கல்வி உளவியல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 281 என்றும் கண்டறியப் பல சோதனைகளைச் செய்தனர். கிட்டத்தட்ட எல்லாச் சோதனைகளிலும் பயிற்சிபெற்ற குழு பயிற்சி பெருத குழுவை விட சிறிதளவு மேம்பாடு: காட்டியது. மேற்குறிப்பிட்ட சோதனையிலிருந்து நாம் சில உண்மைகளை நினைவி லிருத்த வேண்டும். (1) பயிற்சி மாற்றம் என்பது பொறியியக்கம்போல் ஏற்படுவ தொன்றன்று. (எ-டு) செய்யுளை மனப்பாடம் செய்பவர் மளிகைக்கடைச் சாமான்களின் பட்டியலை நினைவுகூர்வர் என்ருே, கட்டுரை எழுது வதில் நேர்த்தியாக இருப்பவர் ஆடையணிவதிலும் அங்ஙனம் இருப்பர் என்ருே எண்ணுதல் தவறு. (2) பொருள்களிளொப்புமை இருப்பின் ஒருதுறையில் ஏற்பட்ட பயிற்சி இன்னொரு துறைக்குப் பயன்படும். முற்றிலும் மாறுபட்ட துறைகளாக இருப்பின், ஒன்றில் பெறும் பயிற்சி பிறிதொன்றுக்குப் பயன்படாது. (எ-டு; உதைப்பந்தாட்டத்தில் 18.9பயிற்சி பெற்றவர் வளைத்தடிப் பந்தாட்டத்திலும்*** திறமை காட்டக்கூடும். இவர் இரண் டாட்டமும் தெரியாதவரைவிட மிகத் திறமையாக விளையாடக்கூடும். தட்டச்சுப் பொறியினை இயக்கப் பழகியவர் ஹார்மோனியத்தைக் கையாளுவதை எளிதில் பழகுகின் ருர். ஒரு பாடம் பயிற்சியின் முழுப் பயனப் பெறவேண்டுமாயின் அப்பாடத்திற்கும் பிற பாடங்களுக்கு முள்ள தொடர்பை ஆசிரியர் வற்புறுத்த வேண்டும்; மாளுக்கர்களையும் அதைக் காணத் தூண்ட வேண்டும். இஃது உடன்பாட்டுப் பயிற்சி மாற்றம்' என வழங்கப்பெறும். இதை யாவரும் ஒப்புக்கொள்வர். காரணம், எதைக் கற்பதற்கும் ஓரளவு அறிதிறன் வேண்டும். இவ்வறி திறன் பொதுக்கூறு; மாற்றத்திற்கு இடம் உண்டு. (3) எதிர்மறைப் பயிற்சி மாற்றமும் நடைபெற ஏதுவுண்டு. தாய்மொழிப் புலமை அங்கிய மொழிப் புலமையை ஓரளவு கெடுக்கும். காரணம், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிவீறு உண்டு. ஒன்றன் தனி வீறினைப் பின் தொடர்ந்து அதை மற்றென்றில் புகுத்தினுல் இரண்டா வது மொழியின் தனித்தன்மை ஓரளவு கெடும் என்பதற்கு ஐயமில்லை. இந்திய மாளுக்கர்கள் தம் ஆங்கிலக் கட்டுரைகளில் இந்திய ஆங்கி லத்தைக் (Indianism) கையாளுவதை ஆங்கிலப் புலவர்கள் அடிக்கடி எடுத்துக் காட்டுவர். இங்கனவே வளைத்தடிப் பந்தாட்டத்தில் சிறந்த 1so Gourg - improvement. so assius - foot ball. 161 வளைத்தடிப் பந்து - hockey, 182 உடன்பாட்டுப் பயிற்சி மாற்றம் - positive transfer. 16 s orgāirunsop', utofff torsopth - negative transfer.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/303&oldid=778156" இலிருந்து மீள்விக்கப்பட்டது