பக்கம்:கல்வி உளவியல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் ஒரு குளவி தன் இரையைக் கொணர்ந்து தன் வளைக்கு அருகே விட்டு விட்டு, உள்ளே போய் வெளிவந்து பின் அவ் இரையை வளைக் குள் இழுத்துச் செல்லுகின்றது. இஃது அதன் இயல்பூக்கம் ஆகும். அக் குளவி வளையினுள் போயிருக்கும்பொழுது அவ் இரையை ஒருவன் தொலைவில் இழுத்துவிடுகின்றன். இப்புதிய நிலையில் பழகிய குளவி இரையை வளையருகில் விட்டு விட்டு உள்ளேபோய் வெளிவந்து அதனை வளைக்குள் கொண்டுபோகும் சடங்கினை விட்டுவிட்டு நேரே அவ் இரையை உள்ளே கொண்டு செல்லுகின்றது. இவ்வாறு மாறிய நிலைக்கு ஏற்றவாறு தன் இயற்கைச் செயலையும் மாற்றிச் செய்வதே அறிவுச் செயலாகும். இயற்கைச் செயலுக்குத் துணையாகி வருவதே அறிவுச் செயலாகும். மாறிய கிலையோடு பழகியதனுல் அதனை உணர்ந்து அதற்கு இயைய நடத்தலே அறிவுச் செயலாகும். முன்னேய துய்த்துணர்வை பயன்படுத்திக் கொண்டு நடப்பதே அறிவுடைமை ஆகும். உள்ளேபோய் வெளியே வருவதற்குள் இரையை எவரோ தொலைவில் கொண்டு செல் கின்றனர் என உய்த்துணர்ந்த பொழுது அதை மனத்தில் வைத்துப் பயன் படுத்திக்கொண்டு குளவி இரையை வெளியே விடாது தன்னேடேயே வளைக்குள் கொண்டு செல்லுகின்றது. இங்ங்னமே ஒரிடத்தில் கூடு கட்டத் தொடங்கும் பறவை தனக்குப் பகை விலங்கு யாதாயினும் அருகில் இருப்பதைக் கண்டுவிட்டால் அதைவிட்டுத் தீங்கற்ற வேருேரிடத்திற் குச் சென்று, அங்கே கூடுகட்டத் தொடங்குகின்றது. இங்ங்ணம் சூழ் நிலைக்கேற்றவாறு ஓர் உயிரி தன்னைத் தக அமைத்துக் கொள்ளும் திற மையை உயிரியலார் அறிதிறன்’ எனக் குறிப்பிடுவர். மனிதனைத் தவிர ig)uôμά&ό - instinct. 2 £££]psir - intelligence.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/305&oldid=778160" இலிருந்து மீள்விக்கப்பட்டது