பக்கம்:கல்வி உளவியல்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கல்வி உளவியல் மற்ற விலங்குகளில் இத்தகைய அறிதிறன் வளர்ச்சியை வாலில்லாக் குரங்குகளிடம் மிகுதியாகக் காண்கின் ருேம். அறிதிறனுக்கு உயிரியலில் வழங்கும் வரையறை உளவியலுக்குப் போதுமான தன்று. மனித உள்ளத்தை ஆராய்கையில் இவ்வளவு துலமான வரையறை அதிகப் பயன்தராது. உளவியலார் பலரும் அறி திறனைப் பலவாறு வரையறுத்துள்ளனர். அறிவுடைமை வேறு; அறி திறன் வேறு. அறிதிறன் என்பது சூழ்நிலையைத் தனக்கேற்பப் பயன் படுத்திக் கொள்ளும் ஒருவித ஆற்றல். ஒரு புதிய நிலையைத் தக்கவாறு சமாளிக்க வல்ல திறமையே அறிதிறன் என்பர் ஒரு சாரார். மற்ருெரு சாரார் கணக்குபோன்ற வெற்றுநிலைப் பொருள்களைச் சிந்தனை செய்யும் திறமையே அறிதிறன் என்பர். அறிவுத்துலங்கலின் வேகமும் வெற்றியுமே அறிதிறன் என்பர் பிறிதொரு சாரார். பினேசிஎன் பார் அறிதிறன் என்பதில் உட்கோள், ஆக்கத்திறன், விடா முயற்சி, ஆராய்ந்து பகுத்தல் ஆகியவை அடங்கும் என்று கூறுகின்ருர். - அறிதிறன் நிலைகள் அறிவுச் செயல்களில் மக்களிடையே வேற்றுமை காணப்படுகின்றது என்பது நீண்டகாலமாக அறியப்பெற்ற செய்தி. இங்ங்னமே தனியா ளிடம் காணப்பெறும் வேற்றுமைகளைப்பற்றி நவீன உளவியல் கன்கு வரையறுத்து எடுத்தியம்புகின்றது, மிக உயர்ந்த அறிதிறன் வாய்ந்த மக்கள் மேதைகள் என்றும், மிகக் குறைந்த அறிதிறன் உடையோர் மந்தமான அறிவுடையோர் என்றும் வழங்கப் பெறுகின்றனர். இவ்வாறு மாணப்பெருகிய அறிதிறனைக்கொண்டவரும், கழியக்குறுகிய அறிதிறனையுடையவரும் மிகச் சிலரே. பெரும்பாலான மக்கள் சராசரியை யொட்டிய திறன் படைத்தவர்கள். கீழே அறிதிறன் ஈவினை விளக்குங்கால் இந்நிலைகளைப் பின்னும் தொடர்பு காட்டி விளக்குவோம். அறிதிறன் ஆய்வுகளின் வளர்ச்சி பண்டிருந்தே மக்கள் ஒருவருக்கொருவர் அறிதிறனை மதிப்பிட்டே வந்துள்ளளர். எடுத்துக்காட்டாக, குக்கிராமத்தில் வாழும் வயது முதிர்ந்த பெரியார் ஒருவர் ஒரு சிறுவன நோக்கி, ஒரு மரத்தில் 10) காகங்கள் இருந்தன. வேடன் ஒருவன் ஒரு காக்கையைச் சுட்டுவிட்டான். மீதி அம்மரத்தில் எத்தனை இருக்கும்? என்ற விளுவை saisiais su - knowledge or intellect. I agar - Binet.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/306&oldid=778162" இலிருந்து மீள்விக்கப்பட்டது