பக்கம்:கல்வி உளவியல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 285. விடுப்பதை நாம் அறிவோம். இங்ங்னமே விடுகதைகள், புதிர்கள், குறுக்கு எழுத்துப்போட்டிகள் போன்ற சாதனங்கள் அறிதிறனே ஒரளவு சோதிக்கப் பயன்படுகின்றன. எனினும், இவையாவும் அறிவியல் முறை யில் தேர்ந்தெடுக்கப் பெறவில்லை; நிலை வகுக்கப் பெறவுமில்லை. இவ்வாறு நமக்குத் தோன்றியவாறு மதிப்பிடுவதைவிடப்பள்ளிகளில் பாடத்திறனை ஆசிரியர்கள் விளுக்கள் மூலம் சோதித்து மதிப்பெண்கள்" வழங்கி மதிப்பிடுவது போன்ற முறையினை மேற்கொள்ளுவது ஓரளவு மேலானது. இவ்வாறு அளந்து அறியும் முறையினை மிகத் துல்லியமான தாகச் செய்கின்றது உளவியற் சோதனை முறை. இம்முறைப்படி மக்களின் அறிதிறனை அளப்பதற்கும் பலவித ஆய்வுகள் வகுக்கப்பெற்றுள்ளன. அறிதிறன் என்பது அளந்து பார்க்கக் கூடிய பெளதிகப் பொரு ளன்றே, அதை எப்படி அளப்பது என்ற ஐயம் நம்மிடையே எழுதல் இயல்பே. அங்ங்னமாயின் வெப்பமும் மின்னுற்றலும் பெளதிகப் பொருள் களல்லவே. அப்படியிருந்தும் பெளதிகர்கள் அவற்றைத் துல்லியமாக அளக்கின்றனரன்ருே ? வெப்பத்தையும் மின்னுற்றலையும் அவற்ருலேற் படும் விளைவுகளைக் கொண்டு அளப்பதைப் போலவே, அறிதிறனேயும் அதன் விளைவுகளைக்கொண்டு அளந்தறியலாமன்ருே ? பெளதிகரின் அளவுகள் எங்ங்னம் நம்பத்தக்கனவோ, அங்ங்னம் உளவியலாரின் அளவுகளும் கம்பத்தக்கவையே. இருவரும் காரியத்தை வைத்துக் கார ணத்தை அளக்கும் தத்துவத்தை மேற்கொள்ளுகின்றனர்; அவ்வளவு தான். பினேயின்" ஆய்வுகள் : 1904-ஆம் யாண்டில் பிரெஞ்சு நாட்டுக் கல்வியமைச்சர் பொதுப்பள்ளிகளில் 'குறைமதியினருக்குக் கற்பிக்கும் முறையை ஆராய்வதற்காக மருத்துவர்கள், கல்வியறிஞர்கள், அறிவிய லறிஞர்கள், பொது அலுவலர்கள் போன்றவர்களின் மாநாடு ஒன்றனைக் கூட்டினர். அவர்களுள் பெரும்பாலோர் பயனற்ற பேச்சில் காலங் கடத்தின ரெனினும், பினே என்ற இளம் உளவியலறிஞரும் சைமன் என்ற மருத்துவப் பெரியாரும் இதனைப்பற்றிச் சிறப்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்; ஓர் அளவுகோலையும் கண்டறிந்தனர். அதன் பின்னரே அறிவளவை என்பதும், அறிவினை அளந்து காண்பது என்ப தும் உலகெங்கும் வழங்கத் தொடங்கின. பினே-சைமன் ஆய்வுகள் : பினேயின் ஆய்வுகள் முதன்முதலாக 1905-இல் வெளியிடப்பெற்றன. அவை மிகுந்த பயனுடையனவாக இருந்த தமதிப்பெண்கள்.marks. பினே-Blnet. 7 songipsir - Simon.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/307&oldid=778164" இலிருந்து மீள்விக்கப்பட்டது