பக்கம்:கல்வி உளவியல்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கல்வி உளவியல் மையால் அவற்றைப் பலநாட்டு உளவியலார்களும் கல்வியியலார்களும் தத்தம் காட்டு கிலேமைக்குத் தக்கவாறு மிக ஆர்வத்துடன் மேற்கொள்ள லாயினர். அதன்பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிடைத்த அனுபவங்களின் பயணுக அவ்வாய்வுகள் பல திருத்தங்களைப் பெற்று எங்கணும் பெருவழக்காயின. பினேயும் சைமனும் இணைந்தியற்றியதால் அவ்வாய்வுகள் பினே-சைமன் ஆய்வுகள்’ என வழங்கப்பெறுகின்றன. படிப்படியாகச் சிக்கலாகிக்கொண்டு வரும் ஆய்வுகளை முதலில் பினே அமைத்துக்கொண்டார். மூன்ருண்டுக் குழவிகள் இவற்றில் எத் தனை விளுக்களுக்கு விடையிறுக்கும் என அறிவதற்குப் பல்லாயிரம் குழவிகளை ஆராய்ந்தார். அந்த மூன்ருண்டுக் குழவிகளில் நூற்றுக்கு எழுபது குழவிகள் எந்த விளுக்களுக்கெல்லாம் விடை யிறுத்தனவோ அந்த விளுக்களை மூன்ருண்டுக் குழவியை அளந்து அறிந்து சுட்டும் விளுக்கள் எனக் குறித்துக்கொண்டார். இவ்வாறே ஒவ்வொரு யாண் டிற்குமாக அந்தந்த யாண்டிற்கு ஏற்ற பொது அறிவு நிலையை (norms) உணர்த்தும் ஆய்வுகளை ஆராய்ந்து குறித்துக்கொண்டார். (எ.டு) மூன்ரும் யாண்டு : 1. குழவி கண், வாய், மூக்கு இவற்றைக் காட்டுதல். 2. நாம் கூறும் சிறு சொற்ருெடரைத் திரும்பச் சொல்லுதல். 3. பத்தில் குறைந்த எவையேனும் இரண்டு எண்களை நாம் கூறியபின் திரும்பச் சொல்லுதல். 4. படத்தில் கண்ட பொருள்களை இன்னவெனக் கூறுதல். 5. தன் குடிப்பெயரை அறிதல். நான்காம் யாண்டு : 1. தான் ஆளு, பெண்ணு என அறிதல். 2. பழக்கமான பெயர்களை அறிதல். 3. பத்தில் குறைந்த எண்களைத் திரும்பச் சொல்லுதல். 4. இரண்டு கோடுகளில் பெரியது எது என அறிதல். மூன்று முதல் பதின் மூன்று வயதுவரை உள்ள குழந்தைகளின் அறிவு நிலைகளை அளக்கும் ஆய்வுகளைப் பினே ஆயத்தம் செய்தார். பினே யின் ஆய்வுகளில் ஆராய்ந்து தேர்ந்தனவும் எளிதில் மதிப்பிடக்கூடியனவு மான பல புதிர் கிலைகள் அடங்கியிருந்தன. இப்புதிர் கிலேமைகள் பல் திறத் தன்மையுடையனவாகவும், குழவிகளின் சூழ்நிலை வேற்றுமை களால் அதிகம் பாதிக்கப்பெருதனவாகவும், பொருளற்ற நினைவினைவிட தீர்மானம், அனுமானம் ஆகிய பண்புகளே அதிகம் அடக்குவனவாகவும் அமைந்துள்ளன. மனவயது : பினே தான் கண்டறிந்த அளவுகோலைக் கொண்டு தன் மேற்பார்வையிலிருந்த பிற்போக்கான குழவிகளை ஆராய்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/308&oldid=778166" இலிருந்து மீள்விக்கப்பட்டது