பக்கம்:கல்வி உளவியல்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 287 அவர்கள் தம் வயதிற்கு ஏற்ற அறிவுநிலை அற்றுக் கிடந்தமை வெளியா யிற்று. குழவிகட்கு வயது எட்டாக இருக்கும்; ஆல்ை, அவர்கள் ஐந்தாம் யாண்டுக் குழவிகள் விடையிறுக்கும் விளுக்கட்கு மட்டிலுமே விடை யிறுக்க வல்லவர்களாக இருப்பர். ஆதலின், அறிவுநிலை ஐந்தாம் யாண் டிற்கு உள்ளது போலவே விளங்கியது எனலாம். அறிதிறன் ஆய்வு களால் நாம் உணரும் வயதினை மனவயது" என்ற பெயரால் குறித்தார் பினே. குழந்தையின் உண்மை வயது காலவயது? என வழங்கப் பெற்றது. இதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவோம். 6 7, 8 வயதுள்ள மூன்று குழந்தைகள் ஏழாம் யாண்டுக்குரிய ஆய்வினுக்குச் சரியாக விடையிறுப்பதாகக் கொண்டால், இம்மூவருக்கும் மனவயது ஒன்றே , அஃதாவது ஏழு. 6, 7, 8 கால வயதுடைய இவர்களில் முதலாமவனை நிறைமதியுடையவன் என்றும், இரண்டாமவனச் சாதாரண (சராசரி) அறிவுடையவன் என்றும், மூன்ருமவனே மந்த அறிவுடையவன் என்றும் கூறுகின்ருேம். பினே அளவு கோலில் மாற்றம்: பினே தற்காலிகமாக 1905-இல் இயற்றிய ஆய்வு அளவைகளில் பினேயும் சைமனும் மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்து 1908-லும், 1911-லும் வெளியிட்டனர். அமெரிக்கா வில் இவ்வாய்வுகளைத் தழுவியும் திருத்தியும் 1911-ல் காரார்ட் என்பாரும் 1912-ல் மான் என் பாரும், 1916 ல் ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டெர்மன் என்பாரும் வெளியிட்டனர். 1916-ல் வெளியிடப் பெற்ற ஆய்வுகள் இருபது யாண்டுகளுக்கு மருத்துவ உளவியலிலும், உள்ளப்பாகுபாட்டிலும், கல்வி ஆலோசனையிலும் பொது அளவையாகத் திகழ்ந்தன. 1937-ல் டெர்மன், மெரில் என்னும் இருவர் இந்த ஆய்வு களில் காணப்பட்ட குறைகளைக் களைந்து மீண்டும் திருத்தியமைத்து வெளியிட்டனர். இந்த ஆய்வுகள்தாம் இன்று அமெரிக்காவில் எங்கணும் பெருவழக்காக உள்ளன. இந்த ஆய்வுகள் தனியாள் ஆய்வுகள்'. இவற்றைக்கொண்டு ஒவ்வொருவராகத்தான் சோதிக்க இயலும். குழு அறிதிறன் ஆய்வுகள்': பினேயின் ஆய்வுகளைக் கையாளுவது கடினமாக இருப்பதாலும், அவற்றை ஒவ்வொரு குழந்தைக்கும் தனிததனி யாகக் கொடுக்கவேண்டியிருப்பதாலும், அவை ஆசிரியர்களுக்குச் £ręrugi — rmerital age. 8 $ rs) Autu& - chronological age. +0 gefur sir agus ssir – individual tests. -

    • @g gopir soil assār-group tests of intelligence.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/309&oldid=778168" இலிருந்து மீள்விக்கப்பட்டது