பக்கம்:கல்வி உளவியல்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கல்வி உளவியல் சிறிதும் நடைமுறையில் பயன்படவில்லை. ஆகவே, உளவியலார் பல குழந்தைகட்குச் சேர்ந்தாற்போல் கொடுக்கவல்ல குழு அறிதிறன் ஆய்வுகளைக் கண்டறிந்தனர். முதலாம் உலகப் பெரும்போர்க்காலத்தில் இவ்வாய்வுகள் முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றின. அமைதிக் காலத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சோதிக்க அவகாசம் கிடைக்கும். ஆளுல், போர்க்காலத்தில் அவசரமாகப் பலரை ஒரே காலத்தில் சோதித்து அறியவேண்டிய நிலைமையுண்டாகும். அதற்குக் குழு ஆய்வுகள்தாம் பெரிதும் பயன்படும். அமெரிக்காவில் போர்க்காலத் தில் பயன்பட்டவைகளுள் முக்கியமானவை இராணுவ ஆல்பா-ஆய்வுகள், இராணுவ பீட்டா-ஆய்வுகள் ஆகும். முன்னவை கற்ருேரைச் சோதிப் பதற்கும் பின்னவை கல்லாதவரைச் சோதிப்பதற்கும் பயன்படுத்தப் பெற்றன. . அறிவுச் செயல் ஆய்வுகள் : சில சமயம் நாம் சோதிக்க விரும்பும் மக்களுக்கு ஆய்வுகள் அமைந்துள்ள மொழி தெரியாமலிருக்கலாம். மேலும், கிராம மக்களுக்கு எளிதில் எட்டாத உலக விவகாரங்களைப்பற்றி யும் சோதிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இத்தகைய சமயங்களில் பயன்படுத்தப்பெறும் ஆய்வுகளை அறிவுச் செயல் ஆய்வுகள்’ என வழங்குவர். இவ் ஆய்வுகளைக்கொண்டு சோதிக்கப்பெறுபவர் எதையும் வாய்மொழியாகச் சொல்ல வேண்டியதில்லை; செய்து காட்டினுல் போதும். எடுத்துக்காட்டாக பலவடிவமான மரத்துண்டுகளை ஒரு மரப் பலகையினின்றும் வெட்டியெடுத்து இவர்களின் எதிரேவைத்து வெட்டி யெடுத்த அத்துண்டுகளை மீட்டும் வெட்டி யெடுக்கப்பெற்ற இடங்களில் எவ்வாறு பதியவைக்கின்றனர் என்பதனைக் கவனித்தால் பொருத்த முணரும் அறிவு எவ்வாறு அவர்க்ளிடையே வளர்ந்துள்ளது என்பதை அறியலாம். ஒவ்வொரு துண்டினையும் பொருத்துவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், அவர்கள் தவறு செய்தல்களின் எண்ணிக்கை ஆகிய வற்றையெல்லாம் குறித்து வைத்து ஒப்பிட்டு கோக்கினல் வயதிற்கேற்ப இவை மாறி வருவதனைக் காணக்கூடும். இத்தகைய பொது கிலே அளவு கோலைக்கொண்டு எல்லாக் குழந்தைகளின் அறிவுநிலையையும் அளந் தறியலாம். - அறிதிறன் ஈவு இக்காலத்தில் அறிதிறன், அறிதிறன் ஈவு’ என்பதன் வாயிலாக மதிப்பிடப் பெறுகின்றது. அறிதிறன் ஈவு என்பது மணவயதை உடல் 1 * offs.jëGoué) goil of sir - performance tests. ** golfiipsir Fosli - intelligence quotient.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/310&oldid=778172" இலிருந்து மீள்விக்கப்பட்டது