பக்கம்:கல்வி உளவியல்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 289 வயதால் வகுத்துவரும் பின்னமேயாம். அறிதிறன் ஈவு பின்னமாக இருப் பதைவிட முழு எண்ணுக இருந்தால் சொல்லுவதற்கு எளிதாக இருக்கு மாதலின் அந்தப் பின்னத்தை 100-ஆல் பெருக்கி வழங்குவதே இப் போது பெருவழக்காகிவிட்டது. அந்தப் பெருக்குத் தொகையே அறி திறன் ஈவு (அ.ஈ) ஆகும். இதை ஒரு எடுத்துக்காட்டால் விளக்குவோம். பரந்தாமனின் வயது 12 யாண்டு 6 மாதம். அவனது மனவயது 14 யாண்டு 2 மாதம். அவ னது அறிதிறன் ஈவு யாது? மன வயது = 14 ஆ. 2 மா. = 170 மாதம் கால வயது = 12 ஆ. 6 மா = 150 மாதம் - மன வயது 170 அ. F. கிால் வயது 150 1.13. அதாவது, அ. ஈ. = 1. 13x100 = 113. ஆகவே, பரந்தாமனின் அ. ஈ. = 113. அறிதிறன் ஈவைக்கொண்டு குழந்தைகளின் அறிதிறனை ஒப்பிடுவது எளிதாகும். இதையே, என்ற ஒரு வாய்பாட்டு முறையில் அமைத்துக் கூறலாம். இங்கு IQ என்பது அறிதிறனையும், MA என்பது மன வயதினையும் CA என்பது கால வயதினையும் குறிக்கின்றன. அறிதிறனைப்பற்றிய புதிய கருத்து அறிதிறன் என்பது யாது? இவ்வினவுக்கு உளவியலறிஞர்கள் ஒன்றுபட்ட கருத்தினைக் கூறுவதில்லை என்பதை மேலே கண்டோம். புதிர் நிலையில் அனுசரிக்கும் பொதுத்திறனே அறிதிறனுகும் என்று பினே கருதினர். அஃதாவது தன் குறை காணல், தீர்மானம், அனுமானம், கற்றல், சிந்தனை, சொற்பயன், இசைத்திறன் ஆகிய யாவும் ஒரு பொது வலிமை அல்லது ஆற்றல்களின் வெளிப்பாடுகள் என்று பினே கொண் டார். ஆயினும், பல ஒப்புத்தொடர்பு’* ஆய்வுகளால் உண்மை அவ்வளவு எளிதானதன்று என்பது தோன்றுகின்றது. அறிதிறன் என்னும் தலைப்பி னுள் அடங்கும் சில பண்புகள் ஒன்ருேடொன்று முற்றிலும் தொடர்பற் றவை. அஃதாவது, ஒருவர் ஒரு துறையில் மதிநுட்பத்துடனும் மற்ருென் 14 ouá Qg5#Liru – correlation. க.உ.-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/311&oldid=778174" இலிருந்து மீள்விக்கப்பட்டது