பக்கம்:கல்வி உளவியல்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 கல்வி உளவியல் றில் அ.. தின்றியும் செயலாற்றலாம். இதிலிருந்து எல்லாத் திறன்களை யும் அடக்கியாளும் பொது அறிதிறன் என ஒன்று இல்லை என்பது வெளிப்படை. ஸ்பியர்மெனின் கொள்கை : அறிதிறன் பொதுத்திறனே என்ற கருத்தினையும், ஒன்ருேடொன்று தொடர்பற்ற சில திறன்களும் உள வென்பதையும் பொருத்தியமைக்கச் சிலர் முயன்றனர். அவர்களுள் ஸ்பியர்மென் என்ற ஆங்கில உளவியலார் முக்கியமானவர். இவருடைய கொள்கைப்படி அறிதிறன் என்பது g என்ற பொதுத் திறனையும், s,s, s, போன்ற பல தனித்திறன்களையும் கொண்டது. எந்தச் செயலும் சிறிது g-யாலும் ஒன்றும் பலவுமான S-களாலும் இயலும். எடுத்துக்காட்டாக ஓவியம் வரைதலை நோக்குவோம். இதில் ஒருவருடைய பொதுத் திறனும் சிறப்புத் திறனுகிய வரைதல் என்பதும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் பொதுத்திறன் ஒன்றே அஃது ஒவ்வொருவரிடமும் கிலேயாக இருக்கும். ஆனால், நபருக்கு நபர் இப் பொதுத்திறன் மாறுபடும். பொதுத்திறனைத் தவிர, ஒவ்வொருவரிடமும் பல தனித் திறன்களும் உள்ளன. இசைத்திறன், கணிதத் திறன், ஏரணத்திறன் ." (தருக்கத் திறன்), சொல் திறன், நினைவுத்திறன் ஆகியவை அவற்றுள் சில. எல்லா வற்றிலும் பொதுத்திறன் கலக்கும் ஆயினும், இஃது ஒவ்வொன்றிலும் வேறுபடும். ஒருவர் ஓர் அறிதிறன் ஆய்வில் பெற்ற மதிப்பெண்ணில் இரு பகுதி கள் உள. ஒரு பகுதி அவருடைய பொதுத் திறனுக்கேற்றவாறும் மற் ருெரு பகுதி அவருடைய தனித்திறனுக்கேற்றவாறும் அமையும். ஆகவே, எந்த ஆய்வும், ஐயையும் 8-யையும் அளக்கின்றது. அவ்வாய்வின் சில பகுதிகள் g-ஐ அதிகமாகவும், சில பகுதிகள் S-ஐ அதிகமாகவும் அளத்தல் கூடும். பொதுத் திறன் அமையப்பெற்றவர்கள் பல துறைகளி லும் திறமைசாலிகளாகத் திகழ்வர்; ஏனெனில், அனைத்திலும் பொதுத் திறன் பங்கு பெறுகின்றது. சிலரிடம் பொதுத்திறன் குறைவாகவிருப்ப தால் அவர்கள் பலதுறைகளில் திறமைசாலிகளாக இருப்பதில்லை. ஆயினும், இவர்களிடமும் சில தனித்திறன்கள் உள்ளன. (எ - டு. பூச்சு வேலை, நாட்டியம், இசை போன்றவை. பொதுத்திறனும் சிறப்புத்திறனும் கலந்தே செயற்படுகின்றன என்பது அறிதிறன்பற்றிய புதிய கொள்கை. இதை இரு-மூலக்கொள்கை' என உளவியலார் வழங்குவர். is cinquir@to sir - Spearman. 1° gryswir##ipsir - logical ability. 17 §5-topsoč Qāmārgos - two - factor theory.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/312&oldid=778176" இலிருந்து மீள்விக்கப்பட்டது